யாழில் தனிநபர் ஒருவரினால் பொதுமக்களுக்கு 2000/= வழங்கப்பட்டதனை
அடுத்து அவர் போலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரடங்கு காலத்தில் ஊரடங்கு விதிகளை மீறி மக்களை ஒன்று கூட்டியமைக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சுமார் ஒரு மில்லியன் ரூபா மக்களுக்கான உதவித்திட்டம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்து மக்கள் கூட்டம் கூடியதாக கூறப்படுகின்றது.
-வின்சம் -