free website hit counter

விஜய்யின் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இதனால், இந்த முறை நான்கு முனைப் போட்டி ஏற்படுவது உறுதியாகியுள்ளது.

ஜனநாயகன் படப் பிரச்சினை, சிபிஐ விசாரணை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை விஜய் சந்தித்து வரும் நிலையில், தவெகவிற்கு பொதுச் சின்னம் கிடைக்குமா? என்பது தொடர்பாக கடந்த சில நாட்களாக அக்கட்சி தொண்டர்கள் இடையே விவாதம் அதிகரித்தது.

இந்த நிலையில், விஜய்யின் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் விசில் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு பொதுச்சின்னம் அளிக்கக்கோரி விஜய் தரப்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. விசில், கால்பந்து, வெற்றி கோப்பை உள்ளிட்ட சின்னங்கள் அடங்கிய பட்டியலில் தவெக சார்பில் வழங்கப்பட்டதை அடுத்து கோரிக்கை ஏற்கப்பட்டது.

அங்கீகரிக்கப்படாத கட்சியான தவெக, ஆணைய விதிப்படி கணக்குகளை தாக்கல் செய்ததால் பொது சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.விசில் சின்னத்தை விஜய் கோரிய நிலையில், அதே சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. தற்போதைய சின்னம் ஒதுக்கீடு 2026 தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.தவெக போட்டியிடாத தொகுதிகளில் விசில் சின்னம் வேறு வேட்பாளருக்கு வழங்கப்படும். முதல் தேர்தலிலேயே பொது சின்னத்துடன் விஜய்யின் தவெக களமிறங்குகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula