free website hit counter

மகளிருக்கு மாதம் ரூ.2,500; மீனவர்களுக்கு நிரந்தர வீடு; ஏஐ அமைச்சகம் - தவெக தேர்தல் அறிக்கையின் 10 உத்தரவாதங்கள்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் 'மக்களின் தேர்தல் அறிக்கை 2026' என்ற பெயரில் முழு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அந்த தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500; வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 10 உத்தரவாதங்கள் வருமாறு:-

மகளிர் மேம்பாடு

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500; 6 விலையில்லா சிலிண்டர்கள்; மணப்பெண்களுக்கு 1 சவரன் தங்கம் + பட்டுச்சேலை; பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்; மாணவர்களின் அம்மாக்களுக்கு ரூ.15,000 கல்வி உதவி; மகளிர் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன்.

இளைஞர் முன்னேற்றம்

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வரை உதவித்தொகை; ஊதியத்துடன் கூடிய 5 லட்சம் இன்டர்ன்ஷிப்; 5 லட்சம் புதிய அரசு வேலைவாய்ப்புகள்; தொழில் தொடங்க ரூ.25 லட்சம் கடன்; அரசுத் தேர்வுகளுக்குக் கால அட்டவணை.

உலகத்தரக் கல்வி

உறைவிட வசதியுடன் 100 காமராஜர் சிறப்புப் பள்ளிகள்; ரூ.20 லட்சம் வரை உயர்கல்விக் கடன்; நவீன கட்டமைப்புடன் அரசுப் பள்ளிகள்; ஏஐ (Artificial Intelligence) மூலம் கட்டணமில்லா போட்டித் தேர்வு பயிற்சிகள்.

விவசாயிகள் நலன்

நிலமுடைய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 முதலீட்டு உதவி; பயிர்க் கடன்கள் தள்ளுபடி; MSP: நெல் குவிண்டால் ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ.4,500; 5 லட்சம் சோலார் பம்புகள்; தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000; 100 சதவீத பயிர்க் காப்பீடு.

சுகாதாரமான தமிழ்நாடு

குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு; நவீன கட்டமைப்புடன் கூடிய மருத்துவமனை; ஆண்டுதோறும் கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை; போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு.

மீனவர் நலன்

தடைக்கால நிவாரணம் ரூ.27,000; மீன்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை; ரூ.25 லட்சம் விபத்துக் காப்பீடு; மீனவர்களுக்கு நிரந்தர வீடு.

சமூகப் பாதுகாப்பு

முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்; 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு; நீண்டகாலம் பட்டா இல்லாதவர்களுக்குப் பட்டா.

தமிழ்நாடு வளர்ச்சி

2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்; ஏஐ அமைச்சகம், ஏஐ பல்கலைக்கழகம், ஏஐ நகரம்; MSME-களுக்கு ரூ.15,000 கோடி ஆதரவு, மாவட்ட வாரியாக 'மாஸ்டர் பிளான்'; தமிழ்நாட்டில் முதலீடு செய்பவர்களுக்கு 21 நாட்களுக்குள் வணிக உரிமம்.

அரசு ஊழியர் நலன்

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனை (OPS); ஐந்தாண்டு பணியிலுள்ள ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம்; அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.18,000, சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.10,000 ஊதியம், பணி ஓய்வின்போது ரூ.15 லட்சம்.

நல்லாட்சி

லஞ்சமில்லா நிர்வாகத்துடன் அரசுச் சேவைகள் அனைத்தும் வீட்டு வாசலில்; காலக்கெடுவுடன் கூடிய அரசு சேவைகள்; நிதி ஒதுக்கீட்டில் 10 சதவீதம் திட்டங்களை மக்களே தீர்மானிக்கும் அதிகாரம். சட்டமன்றத்தில் மக்கள் முறையீட்டுக்காக ஒருநாள்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: