free website hit counter

அதிகரித்த வாக்களிப்புடன் தமிழகத் தேர்தல் 2026 !

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகளவிலான மக்கள், ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாகத் தமிழகத் தேர்தல்களச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிற்பகல் 3.00 மணிவரையில் சுமார் 70 வீத வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளதாகவும், இது கடந்த 21ம் ஆண்டுத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், சுமார் 70 இலட்சம் மக்கள் அதிகளவில் வாக்களித்திருப்பதாகவும் தெரியவருகிறது.  தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகளுக்குப் பிறகு நடக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதாலும், 18 வயது முதல் 40 வயதுக்குள் சுமார் இரண்டரை கோடி பேர் உள்ளதாலும்  இந்த அதிகரிப்புஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாலை 6.00 மணிக்கு வாக்களிப்பு நிறைவுபறுகையில் இது 80 வீதமாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அறியவருகிறது.

தமிழகம் முழுவதும்  75,064 வாக்குச்சாவடிகளில் பொது மக்கள் வாக்களித்து வருகின்றார்கள். வாக்குப்பதிவையொட்டி ஒன்றரை லட்சம் காவலர்களும்,சுமார் 23 ஆயிரம் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.இன்று காலை தொடங்கிய தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் மொத்தமாக 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 85 பேர் களம் காண்கின்றனர். இதில் 3,579 ஆண்களும், 443 பெண்களும், ஒரு மூன்றாம் பாலினத்தவரும் அடக்கம்.

வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்குவதற்கு முன், சென்னை திருவான்மியூரில் உள்ள பாரதிதாசன் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில்,  நடிகர் அஜித்குமார் காலை 6.55 மணிக்கு வந்திருந்து, முதலாவதாக தனது வாக்கினை பதிவு செய்தார். மதுரவாயல் னது வாக்கினை பதிவு செய்தார். விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில்  தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: