free website hit counter

இந்தியா-இங்கிலாந்து இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தியா-இங்கிலாந்து உறவுகள் நீண்ட காலமாக நல்ல நிலையில் உள்ளன. இதை மேலும் வலுப்படுத்தும் வகையில், பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். அதன்படி, நேற்று லண்டன் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி இன்று பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இந்தியா-இங்கிலாந்து இடையேயான இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, இந்தியா-இங்கிலாந்து இடையே முக்கியமான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

குறிப்பாக, இந்தியா-இங்கிலாந்து இடையே இன்று சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என்ற முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், சந்தைப்படுத்தல் மேம்படும் என்றும், இருதரப்பு வர்த்தகம் ஆண்டுதோறும் சுமார் 34 பில்லியன் டாலர்கள் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்படும் மருத்துவப் பொருட்களின் விலை இந்தியாவில் குறையும்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு ஜவுளி, காலணிகள் மற்றும் தோல் பொருட்களின் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும், மேலும் இரு நாடுகளும் இதனால் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, இந்தியப் பொருட்களுக்கு இங்கிலாந்து விதிக்கும் வரி 15 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகக் குறைக்கப்படும். அதே நேரத்தில், இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கி போன்ற மதுபானங்களுக்கு இந்தியாவில் விதிக்கப்படும் வரி 150 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகக் குறைக்கப்படும்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மோடி கூறினார். முன்னதாக, மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இங்கிலாந்து உடனான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது. அதே நேரத்தில், இந்த ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும், ஒப்பந்தம் நடைமுறைக்கு வர சுமார் 12 முதல் 15 மாதங்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: