free website hit counter

புதிய திட்டங்கள் அற்ற தோல்வி பட்ஜெட் - தமிழக எதிர்கட்சித் தலைவர்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழக அரசின் 2026 - 2027 வரவு செலவு அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது எனத் தெரிவித்திருக்கின்றார் தமிழக எதிர்கட்சித் தலைவர் திரு. உதயநிதி.

நேற்று மதியம் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த அவர், விசாரணைகளின் முடிவில் இரவு விடுதலையாகி, சென்னை திரும்பியபின், இன்று காலை சட்டசபையில் நிகழ்வுகளுக்குச் சமூகமளித்திருந்தார். 

நிதியமைச்சர் திரு. மரிய வில்சன் அவர்களால், வரவு செலவு அறிக்கை வாசிக்கப்பட்ட பின், செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்கட்சித்தலைவர் " தமிழக அரசின் புதிய பட்ஜெட், ஏமாற்றம் அளிப்பதாகவும், தேர்தல்காலத்தில் தவெக குறிப்பட்ட மாற்றம் வரும் என்பதை, முன்னைய அரசுகள் அறிவித்த திட்டங்களின் பெயர்களை மாற்றி மட்டுமே அறிவித்துள்ளார்கள். அதைத் தவிர வேறெதுவும் சிறப்பாகச் சொல்வதற்கில்லை. மொத்ததில் மக்களுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட் இதுவென காட்டமாக தனது கருத்தினைச் செய்தியாளர்களிடம் பதிவு செய்திருந்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula