free website hit counter

பிரபாஸின் ராதே ஷியாமில் யுவன் ஷங்கர் ராஜா!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் திரைப்படத்திலிருந்து
காதல் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இப்பாடலுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். அதே பொருள் தரும் வரிகள், ஆனால் முற்றிலும் வித்தியாசமான இசையில் உருவாகியுள்ள இதன் இந்தி பதிப்பு விரைவில் வெளியாகும்.

படம் குறித்த எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முப்பரிமாண காணொளியாக இன்று வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் பிரபாஸின் பிறந்த நாளானன்று ராதே ஷியாமின் டீசர் வெளியிடப்பட்டது. இப்படத்தில் பிரபாஸின் கதாபாத்திரமான விக்ரம் ஆதித்யா குறித்த சிறப்பு டீசராக இது இருந்தது

ராதே ஷியாம் படத்திலிருந்து பிரபாஸின் சிறப்பு போஸ்டர் ஒன்றும் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது நினைவிருக்கலாம். பல வருடங்களுக்கு பிறகு பிரபாஸ் காதல் கதையில் நடிக்கிறார். முதன்முறையாக பூஜா ஹெக்டேவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

இவர்கள் இருவரின் சிறப்பு போஸ்டரும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளன்றும் ஒரு சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டது.

ஜனவரி 14, 2022 பொங்கல் திருநாளை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது ராதே ஷியாம். 

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: