free website hit counter

விஜய்க்கு மிரட்டல் !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சமீபத்தில் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதில் விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வெற்றியைப் பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களை சென்னைக்கு அழைத்துச் சந்தித்து, அவர்களுக்கு விருந்தளித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் விஜய். இதையொட்டி விரைவில் விஜய் நேரடி அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் கடற்கரையை ஒட்டி வீடுகட்டி வாழ்ந்துவரும் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைப்பேசியில் மிரட்டல் விடுத்தார் ஒரு நபர். தகவலறிந்த சென்னை வெடிகுண்டு நிபுணர்கள், நடிகர் விஜய் வீட்டுக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்குப் பின் மிரட்டல் தகவல், புரளி எனத் தெரியவந்தது.

போலீஸ் விசாரணையில் மிரட்டல் விடுத்தவர் விழுப்புரத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன் என்பதும் இவர் வழக்கமாக நடிகர்களுக்கும் இயக்குநர்கள் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் ஜெய் பீம் பட விவகாரத்தில் மலிவான அரசியல் செய்துவரும் ஒரு சாதிக்கட்சியின் இளைஞர் அணியில் இருந்து நீக்கப்பட்டவர் இந்த புவனேஷ்வரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: