free website hit counter

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் ஜோசப் விஜய் இன்று (செப். 1) தண்ணீர் திறந்துவைத்தார்.

இன்று முதல் 45 நாள்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.

மேட்டூர் அணை திறப்பு நிகழ்வுக்கு வந்த முதல்வர் விஜய், காவல்துறையினரின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவைத்தார் முதல்வர் விஜய். மதகுகளில் இருந்து வரும் தண்ணீரில் பூக்களைத் தூவி வரவேற்றார். தொடர்ந்து விவசாயிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட முதல்வர், மேட்டூர் அணை தொடர்பான விளக்க புகைப்படங்களை பார்வையிட்டார்.

இந்த விழாவில் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

வழக்கமாக காவிரி டெல்டா பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் நிலையில் தண்ணீர் இல்லாத காரணத்தால் இந்த ஆண்டு தாமதமாகத் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் 93 ஆண்டு கால வரலாற்றில், காலதாமதமாக 62-வது முறையாக இன்று பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula