free website hit counter

பிக்பாஸ் முகேன் நடிக்கும் ‘வேலன்’ நாயகத் தோற்றம் அறிமுகம்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பிக்பாஸ் சீசன் 3-இன் மூலம் பிரபலமானவர் முகேன் ராவ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘வேலன்’.

ஆனால் முதன் முதலில் ‘வெற்றி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கவே முகேன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் ‘வேலன்’ படம் ஓடிடிக்காக எடுக்கப்பட்டு வருகிறது. ‘வெற்றி’ படத்தை, கடந்த 2011-ஆம் ஆண்டு நானி, நித்யாமேனன் நடித்து வெளியான‘வெப்பம்’ படத்தை இயக்கிய அஞ்சனா அலிகான் தான் இயக்கி வருகிறார். இவர் கவுதம் மேனனின் உதவி இயக்குநர். ஆனால் ‘வெற்றி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது.

‘வெற்றி’ படத்தைத் தொடர்ந்து, முகேன் ராவ் கதாநாயகனாக நடிக்கும் ‘வேலன்’ படம் தொடங்கப்பட்டு அதில் பிரபு, சூரி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பதை உறுதி செய்யும் விதமாக தொடர்ந்து கதாபாத்திர தோற்றங்களை படக்குழு வெளியிட்டு வந்தது. இது தமிழ் இளைஞனுக்கும், மலையாள யுவதிக்கும் இடையிலான காதலை மையப்படுத்தி நகைச்சுவைப் படம். சூரி கதாநாயகியின் அண்ணனாக மலையாளியாக நடிக்கிறார். இன்று கதாநாயகனாக நடிக்கும் முகேனின் நாயக வேடத் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: