free website hit counter

ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலம் நீடிப்பு!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஒரு நாடு - ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக் குழுவின் பதவிக் காலம்
மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவிற்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், இது சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தலை நேற்று வெளியிட்டுள்ளார்.

ஒரு நாடு - ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழுவின் பதவிக்கலாம் நேற்றுடன் முடிவடைந்தது.

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் காலகொடத்தே ஞானசார தேரர் தலைலமையிலான செயலணியின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. ஞானசார தேரர் தலைமையில் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டது.

நாடு முழுவதும் உள்ளடங்கும் வகையில் மக்களிடம் விரிவான முறையில் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை பெற வேண்டும் என்பதால், செயலணிக்குழுவின் பதவிக் காலத்தை நீடித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: