free website hit counter

அர்ஜெண்டினா அணிக்காக 100 கோல் அடித்து மெஸ்சி சாதனை

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஹாட்ரிக் கோல் அடித்த மெஸ்ஸி.
கத்தாரில் கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி இறுதிப்போட்டியில் பிரான்சை வீழ்த்தியது.

அர்ஜென்டினா அணி அதற்கு பிந்தைய போட்டிகளிலும் `சாம்பியன்` என்ற அந்தஸ்துடன் உற்சாகமாக விளையாடி வருகிறது.

உலக சாம்பியனான அர்ஜென்டினா-குராக்கோ அணிகள் மோதிய நட்பு ரீதியிலான சர்வதேச கால்பந்து போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்தது.

இதில் அர்ஜென்டினா 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

அர்ஜென்டினா கேப்டனும், நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்சி 3 கோல்கள் அடித்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார். அவர் 20, 33 மற்றும் 37-வது நிமிடங்களில் கோல் அடித்தார். நிக்கோலஸ் கோனல்ஸ், என்சோ பெர்னாண்டஸ், டிமரியா, கோன்சாலோ மாண்டியல் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர்.

மெஸ்சி முதல் கோலை அடித்த போது சர்வதேச போட்டியில் 100 கோல்கள் அடித்து புதிய மைல்கல்லை எட்டினார். அவர் அர்ஜென்டினா அணிக்காக 174 போட்டியில் விளையாடி 102 கோல்கள் அடித்துள்ளார்.

சர்வதேச போட்டியில் 100 கோல்களை அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை மெஸ்சி பெற்றார்.

போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ 198 போட்டியில் விளையாடி 122 கோல்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். ஈரான் நாட்டை சேர்ந்தவரான அலிடாய் 148 ஆட்டத்தில் 109 கோல்கள் அடித்து 2-வது இடத்தில் இருக்கிறார்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: