பராபவ தமிழ்புத்தாண்டில் விருச்சிக இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) விரிவாகக் கணித்துத் தந்துள்ள இப்பலன்கள் கோசார ரீதியான பொதுப் பலன்கள்.
உங்கள் தசாபுத்திகளின அடிப்படையிலும், கிரகநிலைகளின்படியும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும். உங்கள் தனிப்பட்ட ஜாதகரீதியான தனித்துவமான பலன்களை கீழே தரப்பட்டுள்ள ஜோதிடரின் தொடர்பு விபரங்களின் வழி. தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
கிரகநிலை: சுக ஸ்தானத்தில் சந்திரன், ராகு - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.
கிரகமாற்றங்கள்
27-06-2026 அன்று குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
20-10-2026 அன்று குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-02-2027 அன்று குரு பகவான் வக்ரம் அடைந்து பாக்கிய ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-11-2026 அன்று ராகு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-11-2026 அன்று கேது பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
எதிலும் நெஞ்சுரத்துடன் போராடி வெற்றிகளைக் குவிக்கும் விருச்சிக ராசி வாசகர்ளே நீங்கள் எடுத்த முடிவை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள தயங்குவீர்கள். உங்களுக்கென்று ஒரு குறிக்கோளுடன் வாழ்வீர்கள்.
பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் மறையும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நோய் உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். முகத்திலும் உடலிலும் புதிய பொலிவு உண்டாகும். சமூகத்தில் உங்கள் புகழும் அந்தஸ்தும் உயரும். வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். சமூகத்தில் உயர்ந்தோரை சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். ஆன்மிகத்திலும், ஆலயத் திருப்பணிகளிலும் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள்.
நண்பர்களிடமும் கூட்டாளிகளிடமும் உங்கள் செல்வாக்கு உயரும். அனாவசிய பயங்களிலிருந்து விடுபடுவீர்கள். ஸ்பெகுலேஷன் மற்றும் பங்குச் சந்தைகளிலிருந்து திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். உங்களின் சொத்து மதிப்பு உயரும். மனதிற்கினிய பயணங்களை மேற்கொள்வீர்கள். யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றைச் செய்து உடல் நலத்தையும், மனவளத்தையும் பாதுகாத்துக்கொள்வீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். அனைத்து இடையூறுகளிலிருந்தும் கடைசி நிமிடத்தில் தப்பித்துக் கொள்வீர்கள்.
உங்களின் இரக்க குணத்தால் பிறருக்கு உதவுவீர்கள். குடும்பத்தில் அனைவரிடமும் பாசத்தோடு பழகுவீர்கள். புதிய முயற்சிகளில் தைரியத்துடன் ஈடுபடுவீர்கள். கண் உபாதைகள் தீரும். அனைத்து சூழ்நிலைகளிலும் சிறப்பான முடிவுகளை எடுப்பீர்கள். இறையருள் தொடர்ந்து கிடைக்கும். உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேறும்.
சிறப்பான ஜோதிடக் கணிப்பில் தினசரி பலன்களை எங்கள் 'உலா' செயலியில் தினமும் காணலாம்.
உங்கள் கடன்களை தக்க நேரத்தில் திருப்பிச் செலுத்துவீர்கள். நேர்முக மறைமுக போட்டிகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். அபாண்டமான பழிகளிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவர்கள் மறுபடியும் குடும்பத்தாருடன் இணைவார்கள்.
பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். புதிய வழிகளில் வருமானம் பெற முயற்சி செய்வீர்கள். பொதுச் சேவையில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள்.
உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் நன்றாக இருப்பதால் உங்களின் தோற்றத்தில் மிடுக்கு உண்டாகும். சிலர் நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வைப் பெறுவார்கள். அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் வேலைகளை சரியாகத் திட்டமிட்டுச் செய்வீர்கள். மேலிடத்தில் நம்பிக்கைக்கு உரியவர் என்ற பெயரை சம்பாதிப்பீர்கள்.

விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். இதனால் கொள்முதல் பொருட்களை விற்று நல்ல லாபத்தைக் காண்பீர்கள். நெருங்கியவர்களுக்கு மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெற்று உங்கள் கௌரவத்தை உயர்த்திக்கொள்வீர்கள். உங்கள் சிந்தனையில் தெளிவும், செயலில் வீரியமும் உண்டாகும்.
அரசியல்வாதிகளின் புகழ் உயரும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். உங்கள் கடமைகளை சுறுசுறுப்புடனும் திடமான முயற்சிகளுடனும் செய்வீர்கள். தொண்டர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள்.
கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். மற்றபடி திட்டமிட்ட வேலைகளில் பொறுப்புடன் நடந்துகொள்வீர்கள். ரசிகர்களை அனுசரித்துச் செல்வீர்கள். மனதில் இருக்கும் வருத்தங்களை வெளியில் காட்ட மாட்டீர்கள்.
பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். உற்றார், உறவினர்கள் உங்களால் பயன் பெறுவார்கள். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
மாணவமணிகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.
- காலை நேர உளவளப் பயிற்சிகள் -
விசாகம் - 4: உங்களது யோசனைகளை மற்றவர்கள் கேட்டும் அனுசரித்தும் செல்வார்கள். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். எதையும் ஆலோசனை செய்து முடிவெடுங்கள்.
அனுஷம்: தெய்வ நம்பிக்கைகளிலும் சடங்குகள் சமிபிரதாயங்களில் நாட்டம் அதிகரிக்கும். உங்களின் செயல்பாட்டினால் உங்கள் குடும்பத்திற்கு நன்மை ஏற்படும்.
கேட்டை: நிலம், வீடு, மனை ஆகியவற்றில் இருந்த சிக்கல்கள் விலகி நன்மையுண்டாகும். குடியிருக்கும் வீட்டினை மாற்றவும் சிலருக்கு வாய்ப்புண்டு. பணவரவில் ஓட்டம் இருக்கும்.
பரிகாரம் : செவ்வாய்தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று வலம் வந்து வணங்கி வரவும். நல்லெண்ணெய் விளக்கு ஏற்றலாம்.
சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி சியாமளா தண்டகம் பாராயணம் செய்யலாம்.
மலர் பரிகாரம்: செவ்வாய்தோறும் எலுமிச்சைமாலையை அம்மனுக்கு அர்ப்பணித்து வலம் வந்து வணங்குங்கள். அவள் ய்ங்களுடன் இருந்து அனைத்து காரியங்களிலும் வெற்றிகளை தேடித் தருவாள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வள்ர்பிறை: ஞாயிறு, புதன், வியாழன் தேய்பிறை: திங்கள், வியாழன்
ஒவ்வொரு இராசிகளுக்குமான விரிவான பலன்களை, உரிய இராசிகளுக்கு மேல் அழுத்திக் காண்க:
உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

