பராபவ தமிழ்புத்தாண்டில் தனுசு இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) விரிவாகக் கணித்துத் தந்துள்ள இப்பலன்கள் கோசார ரீதியான பொதுப் பலன்கள்.
உங்கள் தசாபுத்திகளின அடிப்படையிலும், கிரகநிலைகளின்படியும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும். உங்கள் தனிப்பட்ட ஜாதகரீதியான தனித்துவமான பலன்களை கீழே தரப்பட்டுள்ள ஜோதிடரின் தொடர்பு விபரங்களின் வழி. தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
தனுசு: ( மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் )
கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன், ராகு - சுக ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சனி - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.
கிரகமாற்றங்கள்:
27-06-2026 அன்று குரு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
20-10-2026 அன்று குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-02-2027 அன்று குரு பகவான் வக்ரம் அடைந்து அஷ்டம ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-11-2026 அன்று ராகு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-11-2026 அன்று கேது பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
எதிலும் நேர்மையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டு முன்னுதாரணமாக வாழும் தனுசு ராசி அன்பர்களே நீங்கள் அனைத்து பிரச்சனைகளையும் உங்கள் வாக்கு சாதுர்யத்தால் சமாளீப்பீர்கள். ஆனால் எந்தக் காரியத்தையும் தள்ளிப் போடுதல் கூடாது என்பதனை கவனித்துக் கொள்ள வேண்டும்.
வருமானம் ஓரளவுக்கு திருப்தியாக அமையும். பழைய கடன்களுக்கு வட்டிகளைச் செலுத்துவீர்கள். பெரிய கடன்கள் ஏதும் ஏற்படாது. செய்தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்ய நேரிடும். பெற்றோர் வழியில் சிறிது மருத்துவச் செலவுகளைச் சந்திக்கலாம். மற்றபடி உங்களின் உடல் ஆரோக்யம் சிறப்பாகவே இருக்கும். உங்கள் வேலைகளை சரியாகத் திட்டமிட்டு செய்வீர்கள். வருமானம் தரக்கூடிய பயணங்களை மட்டுமே மேற்கொள்வீர்கள்.
அதேசமயம் மன அழுத்தம் ஏற்படும். எந்த அனாவசியப் பிரச்னைகளிலும் சிக்கிக் கொள்ள வேண்டாம். வழக்கு விவகாரங்கள் இந்தக் காலகட்டத்தில் முடிவுக்கு வராது. எவரிடமும் கடினமான வார்த்தைகளை உதிர்க்க வேண்டாம். குழப்பமான விஷயங்களிலிருந்து தள்ளி இருக்கவும். மேலும் ஸ்பெகுலேஷன் துறைகளிலும் அதிகமாக ஈடுபட வேண்டாம். மற்றபடி உங்கள் தேவைகளை எப்பாடுபட்டாவது பூர்த்தி செய்துவிடுவீர்கள்.
செலவுகளை ஈடுகட்டும் வகையில் வருமானம் வந்துகொண்டிருக்கும். அலைச்சலும், டென்ஷனும் கட்டுக்குள் இருக்கும். உங்கள் கடமைகளை முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.
சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். பழைய முதலீடுகளில் வருமானம் அதிகரிக்கும். உங்கள் பேச்சில் நிதானமும், பொறுமையும் இருக்கும். உங்களின் எண்ணங்கள் கச்சிதமாக செயல்வடிவம் பெறும்.
சிறப்பான ஜோதிடக் கணிப்பில் தினசரி பலன்களை எங்கள் 'உலா' செயலியில் தினமும் காணலாம்.
உற்றார், உறவினர்கள் உங்களிடம் சுமுகமாகப் பழகுவார்கள். உடல் உபாதைகள் பெரிதாக ஏற்படாது. தாயின் பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும்.
உத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் உங்களின் வேலைகளை செவ்வனே செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு நேசக்கரம் நீட்டுவார்கள். பயணங்களால் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படாது. என்றாலும் கொடுக்கப்பட்ட வேலைகள் நன்றாகவே முடிவடையும். அலுவலகத்தில் உங்கள் கெளரவத்திற்கு எந்தக் குறையும் ஏற்படாது.
வியாபரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மனதில் குதூகலம் நிறையும். புதிய முதலீடுகளால் பயன் பெறுவீர்கள். கூட்டாளிகள் உங்களிடம் சுமுகமாக நடந்துகொள்வார்கள். உங்களின் பேச்சுக்கு நல்ல மதிப்பு கிடைக்கும்.
விவசாயிகள் விளை பொருட்களால் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். நீர்ப்பாசன வசதிகளை மேற்கொள்ள எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும். புதிய குத்தகைகள் உங்களை நாடி வந்தாலும் அவற்றைத் தவிர்க்கவும். வயல், வரப்பு சண்டைகளில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இதனால் புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாது.
கலைத்துறையினர் விழிப்புடன் செயல்பட்டு ஒப்பந்தங்களை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றைச் செய்து உடலையும் மனதையும் சிறப்பாக வைத்துக் கொள்வீர்கள். சக கலைஞர்களை பக்குவமாக சமாளிக்கவும்.
பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். பெற்றோரின் ஆதரவினால் தனலாபம் அடைவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள். திட்டமிட்டு பதற்றப்படாமல் படித்து வெற்றி காண்பீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.
- காலை நேர உளவளப் பயிற்சிகள் -
மூலம்: சுபகாரிய விஷயங்கள் தொய்வு இல்லாமல் நடக்கும். வேலை இழந்தவர்கள் மீண்டும் பணியில் சேர பொன்னான காலம் வாய்க்கும்.
பூராடம்: மேலிடத்தில் உள்ள அதிகாரிகள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்சனைகளை நிதானமான அணுகுமுறையுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.
உத்திராடம் - 1: தொழில்துறையாளர்களுக்கு நன்றாக இருக்கும். ஊழியர்கள் அமைதியாகப் போவார்கள். பேங்க் பணப் பரிமாற்ற முறையில் தங்குதடையின்றி நடைபெறும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
பரிகாரம் : வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகுருபகவானை வணங்கி வரவும். தினமும் முன்னோர்களை வணங்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி காலை சிவபுராணம் படிக்கவும். தேவாரம் தெரிந்தவர்கள் அதனை பாராயணம் செய்யவும்.
மலர் பரிகாரம்: வியாழகிழமைதோறும் வினாயகருக்கு அருகம்புல்லை அணிவித்து வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக மூன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வள்ர்பிறை: திங்கள், புதன், வியாழன் தேய்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி
ஒவ்வொரு இராசிகளுக்குமான விரிவான பலன்களை, உரிய இராசிகளுக்கு மேல் அழுத்திக் காண்க:
உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

