free website hit counter

துலாம் : தமிழ் புத்தாண்டுப் பலன்கள்

ஜோதிடம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பராபவ தமிழ்புத்தாண்டில் கன்னிஇராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன.  4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) விரிவாகக் கணித்துத் தந்துள்ள இப்பலன்கள் கோசார ரீதியான பொதுப் பலன்கள்.

உங்கள் தசாபுத்திகளின அடிப்படையிலும், கிரகநிலைகளின்படியும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும். உங்கள் தனிப்பட்ட ஜாதகரீதியான தனித்துவமான பலன்களை கீழே தரப்பட்டுள்ள ஜோதிடரின் தொடர்பு விபரங்களின்  வழி. தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

துலாம்: ( சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம் )

கிரகநிலை: பஞ்சம  ஸ்தானத்தில் சந்திரன், ராகு ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சனி -  களத்திர  ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - லாப  ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

கிரகமாற்றங்கள்

27-06-2026 அன்று குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
20-10-2026 அன்று குரு பகவான் தொழில்  ஸ்தானத்தில்  இருந்து லாப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-02-2027 அன்று குரு பகவான் வக்ரம் அடைந்து தொழில்  ஸ்தானத்தில்  இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-11-2026 அன்று ராகு பகவான் பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-11-2026 அன்று கேது பகவான் லாப  ஸ்தானத்தில்  இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
எதிலும் எந்த இடத்திலும் நியாயத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காக போராடும் துலா ராசி வாசகர்களே நீங்கள் அனைவராலும்  விரும்பப்படுவீர்கள். அதிகம் சுமைகளை எடுத்துக் கொள்வீர்கள். அதே நேரம் சின்ன சின்ன பிரச்சனைகளில் தலையிட்டு வெளியில் வர தள்ளாடுவீர்கள். 

தலைமையை அனைவரும் ஏற்றுக்கொள்ளச் செய்வார். செல்வத்துடன் செல்வாக்கும் உயரும். செய்யும் தொழிலில் மேன்மையும், பண வரவும் உண்டாகும். பெற்றோர் வழியில் ஏற்பட்ட உடல் உபாதைகள் மறையும். கடன் தொல்லை, மறைமுக எதிர்ப்புகள் என்று எதுவும் ஏற்படாது. வெளியில் கொடுத்திருந்த கடன் வட்டியும் முதலுமாகத் திரும்பி வரும். புதிராக இருந்த உறவினர்கள் நல்லபடியாகப் பழகுவார்கள். எல்லோருக்கும் நல்லவர் என்று பெயரெடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்.

உங்கள் சிந்தனைகள் தெளிவாகும். நன்கு யோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இதனால் வருமானம் உயரும். இறை வழிபாட்டில் முழு ஈடுபாடு உண்டாகும். நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பீர்கள்.

சகோதர, சகோதரிகளின் ஆதரவு நன்றாக இருக்கும். தாழ்வு மனப்பான்மை மறையும். குடும்பத்தில் உங்கள் பெயரும், செல்வாக்கும் உயரும். தீயோரின் சகவாசம் நீங்கும். நண்பர்களிடம் உங்களுக்கு முன்பு ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும்.

நெடுநாளாக பாதிக்கப்பட்டிருந்த தோல் மற்றும் வயிறு உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். கடினமாக உழைத்து பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். உங்களை வீண் வம்பு வழக்குகளில் சிக்க வைக்க நினைக்கும் நண்பர்களைக் கண்டறிந்து விலக்குவீர்கள்.

சிறப்பான ஜோதிடக் கணிப்பில்  தினசரி பலன்களை எங்கள் 'உலா' செயலியில் தினமும் காணலாம்.

உலா செயலி இணைப்பு

உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். ஆனாலும் சக ஊழியர்கள் பகைமை பாராட்டுவார்கள். அதனால் அவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும். அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தினால் தோல்வியிலிருந்து தப்பிக்கலாம். மற்றபடி உங்கள் செயல்களை செவ்வனே செய்து முடிப்பீர்கள். பயணங்களால் எதிர்பார்த்த வருமானம் கிடக்கும்.

வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசவும். முன்கோபத்தைக் குறைத்துக்கொள்ளவும். கடும் போட்டிகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். எனவே புதிய முதலீடுகள் வேண்டாம். மற்றபடி கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சரளமாக முடியும். கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள்.

விவசாயிகளுக்கு வருமானம் குறைந்தாலும் செலவு அதிகரித்தாலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். விளைபொருட்களை உடனுக்குடன் சந்தைக்கு எடுத்துச் சென்று நல்ல முறையில் விற்பனை செய்வீர்கள். கால்நடைகளை நன்கு பராமரிப்பீர்கள். பூச்சி மருந்துகளை சரியாகப் பயன்படுத்துவீர்கள்.

அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள். புதிய உத்வேகத்துடன் உங்கள் வேலைகளைச் செய்வீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் முக்கியமான பயணங்களைச் செய்வீர்கள்.

கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பிறரின் அபிமானத்தைப் பெறுவீர்கள். இருப்பினும் தொழிலில் போட்டி இருப்பதால் விருதுகளையும், பாராட்டுகளையும் பெற கவனமாக உழைக்க நேரிடும்.

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராக இருந்தாலும் கணவர் வழி உறவினர்களுடன் நல்லுறவு தொடரும். சிலருக்கு வயிறு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உணவு விஷயங்களில் கவனம் தேவை. ஆன்மிகத்தில் ஈடுபட்டு மனத் தெளிவு பெறவும்.

மாணவமணிகள் நன்றாகப் படித்து எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள். விளையாட்டிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். மனதை ஒருநிலைப்படுத்தினால் மேலும் புகழடையலாம். 

     

- காலை நேர உளவளப் பயிற்சிகள் -

 சித்திரை - 3, 4: வாகனங்கள், மற்றும் இயந்திரங்களை பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு பகீரதப் பிரயத்தனம் செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும். 

ஸ்வாதி: சிறிது முயற்சி செய்வதன் மூலம் சிறந்த வாய்ப்புகள் கைகூடும். மேலும் உங்கள் கௌரவம் அதிகரிக்கும். 

விசாகம் - 1, 2, 3: புத்துணர்ச்சியுடன் எதையும் எதிர் கொள்வீர். நல்ல உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் இருக்கும்.   நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் மிகச் சாதுர்யமாக கையாளுவீர்கள். 

பரிகாரம் : வெள்ளிதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகருடனை வணங்கி வரவும். நெய் விளக்கு ஏற்றலாம். முடிந்தவரி  கருட தரிசனம் செய்யவும். தினமும் முன்னோர்களை வணங்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி நமசிவய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லவும். ராமஜெயமும் எழுதலாம். 

மலர் பரிகாரம்: சனிக்கிழமைதோறும் வில்வ இலையை சிவனுக்கு சாத்தி வழிபட்டு வர உங்கள் துக்கங்கள் சந்தோஷமாக மாறும். உணர்ச்சிகளை  அடக்க யோகா செய்யுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வள்ர்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி தேய்பிறை: திங்கள், வெள்ளி

ஒவ்வொரு இராசிகளுக்குமான விரிவான பலன்களை, உரிய இராசிகளுக்கு மேல் அழுத்திக் காண்க:

 

- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.  தொலைபேசி எண் : +91 78451 19542

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: