free website hit counter

உக்ரைனுக்குக் கிடைத்த வெற்றி !

முற்றம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ரஷ்யா தொடுத்த போரின்காரணமாக கடந்த இரு மாதகாலமாக பெரும் இழப்புக்களைச் சந்தித்து வருகிறது உக்ரைன். மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வதிவிடங்களை விட்டு வெளியேறி, அயல்நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் பெற்று வருகின்றார்கள். இவ்வாறான நிலையில், உக்ரைனியர்கள் எங்கிருந்தாலும் மகிழும் வகையில் வெற்றி ஒன்றினைப் பெற்றிருக்கின்றார்கள்.

ஐரோப்பாவின் முக்கியமான போட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான யூரோவிஷன் 22 இசைப் பாடல் போட்டியில் உக்ரைனின் கலுஷ் இசைக்குழு வெற்றி பெற்றுள்ளது. கலுஷ் ஆர்கெஸ்ட்ரா அவர்களின் 'ஸ்டெபானியா' பாடலின் மூலம் உக்ரைனுக்கான வெற்றியைத் தேடிக் கொண்டது.

நடுவர்களின் புள்ளியியல்படி, பிரித்தானியாவின் சாம் ரைடரின் என்ட்ரி ஸ்பேஸ் மேன் 283 புள்ளிகளுடன் முன்னணியிலும், அதற்கடுத்ததாக, ஸ்வீடன் மற்றும் ஸ்பெயின் குழுக்கள் முறையே 258 மற்றும் 231 புள்ளிகளுடனும் இருந்த நிலையில், ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா முழுவதிலும் உள்ள பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட விருப்பு வாக்குகளினால் கிடைத்த 439 புள்ளிகளுடன் உக்ரைன் ஒட்டுமொத்தமாக 631 புள்ளிகளைப் பெற்று வெற்றி கண்டது.

உக்ரைன் இதற்கு முன்னதாக, 2004 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இப்போட்டியின் வெற்றியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கலுஷ் ஆர்கெஸ்ட்ரா ராப் குழுவான கலுஷின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டது, உக்ரைனின் பாரம்பரிய இசை மற்றும் கலையில் காணப்படும் மையக்கருத்துக்களுடன் நவீன ஹிப்-ஹாப் ஒலிகளை இணைத்து அவர்கள் பாடிய பாடலில் உக்ரைனில் சமகால வாழ்வியலோடு ஒத்த வரிகளும் இருந்தது.

இந்த இறுதிப்போட்டியில் கலந்து கொண்ட குழுக்களும் அவை பெற்ற புள்ளிகளின் விபரங்களும் வருமாறு :

  உக்ரைன்: கலுஷ் இசைக்குழு - ஸ்டெபானியா(631 புள்ளிகள்)

  யுனைடெட் கிங்டம்: சாம் ரைடர் -விண்வெளி மனிதர் (466 புள்ளிகள்)

  ஸ்பெயின்: சேனல் -ஸ்லோமோ (459 புள்ளிகள்)

  ஸ்வீடன்: கொர்னேலியா ஜேக்கப்ஸ் - என்னை நெருங்கிப் பிடி (438 புள்ளிகள்)

  செர்பியா: கான்ஸ்ட்ராக்டா -இன் கார்போர் சானோ (312 புள்ளிகள்)

  இத்தாலி: மஹ்மூத் & பிளாங்கோ -பிரிவிடி (268 புள்ளிகள்)

 மால்டோவா: Zdob மற்றும் Zdub & Advahov Brothers –Trenulețul(253 புள்ளிகள்)

 கிரீஸ்: அமண்டா ஜார்ஜியாடி டென்ஃப்ஜோர்ட் - டை டுகெதர் (215 புள்ளிகள்)

 போர்ச்சுகல்: MARO-Saudade Saudade (207 புள்ளிகள்)

 நார்வே: சப்வூல்ஃபர் - அந்த ஓநாய்க்கு வாழைப்பழம் கொடுங்கள் (182 புள்ளிகள்)

 நெதர்லாந்து: S10 - டி டிப்டே (171 புள்ளிகள்)

 போலந்து: ஓச்மன் - நதி (151 புள்ளிகள்)

 எஸ்டோனியா: ஸ்டீபன் -ஹோப் (141 புள்ளிகள்)

 லிதுவேனியா: மோனிகா லூய் - சென்டிமென்டாய் (128 புள்ளிகள்)

 ஆஸ்திரேலியா: ஷெல்டன் ரிலே -அதே போல் இல்லை (126 புள்ளிகள்)

 அஜர்பைஜான்: நாதிர் ருஸ்டம்லி – ஃபேட் டு பிளாக் (106 புள்ளிகள்)

 சுவிட்சர்லாந்து: மரியஸ் பியர் -பாய்ஸ் டூ க்ரை (78 புள்ளிகள்)

 ருமேனியா: WRS -Llámame (65 புள்ளிகள்)

 பெல்ஜியம்: ஜெர்மி மகீசி -மிஸ் யூ(64 புள்ளிகள்)

 ஆர்மீனியா: ரோசா லின் - ஸ்னாப் (61 புள்ளிகள்)

 பின்லாந்து: தி ராஸ்மஸ்-ஜெசபெல்(38 புள்ளிகள்)

 செக் குடியரசு: நாங்கள் டோமி -லைட்ஸ் ஆஃப் (38 புள்ளிகள்)

 ஐஸ்லாந்து: சிஸ்டூர் - மீ ஹக்கண்டி சோல் (20 புள்ளிகள்)

பிரான்ஸ்: அல்வான் & அஹெஸ் -ஃபுலன் (17 புள்ளிகள்)

ஜெர்மனி: மாலிக் ஹாரிஸ்-ராக்ஸ்டார்ஸ் (6 புள்ளிகள்)

ஐரோப்பாவின் 40 நாடுகள் கலங்து கொண்ட இப்போட்டியின் இறுதிச் சுற்று, 14.05.2022 சனிக்கிழமை இரவு, இத்தாலியின் தொறினோ ( Turin) நகரிலுள்ள பாலா ஒலிம்பிக்கோ (Pala Olimpico) அரங்கத்தில் நடைபெற்றது. இறுதிச் சுற்றுப் போட்டியில் 25 நாடுகளின் கலைஞர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula