மியான்மாரில் பெப்ரவரியில் ஏற்பட்ட இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் பின் நிகழ்ந்த பொது மக்களின் எதிர்ப்புப் போரட்டம் இரும்புக் கரம் கொண்டு அடக்கப் பட்டதில் சுமார் 800 பேருக்கும் அதிகமான மக்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் ரகசிய திருமணம்!
சனிக்கிழமை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது காதலியான கேரி சைமண்ட்ஸ் என்பவரை வெஸ்ட்மின்ஸ்டெர் தேவாலயத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக பிரிட்டன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
74 ஆவது WHA கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்! : தாய்வானுக்கு உதவ சீனா விருப்பம்
சுமார் 194 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நாவின் உலக் சுகாதார அமைப்பின் 74 ஆவது உலக சுகாதரக் கூட்டத் தொடரான WHA இன்று திங்கட்கிழமை காணொளி வாயிலாக ஆரம்பமானது.
மியான்மாரில் நீதிமன்றத்தில் ஆங் சான் சூகி நேரடி ஆஜர்!
மியான்மாரில் பெப்ரவரி மாதம் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் பின் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டிருந்த அந்நாட்டின் அரச தலைவரான ஆங் சான் சூகி 3 மாதங்கள் கழித்து திங்கட்கிழமை முதன்முறையாக நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டுள்ளார்.
கோவிட் தடுப்பூசிகளைப் பாதுகாக்க அமெரிக்க உதவியை நாடும் பாகிஸ்தான்
உலகளவில் கொரோனா தடுப்பூசிக்கு தேவை மிகவும் அதிகரித்துள்ள காரணத்தினால், வறிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கோவிட் தடுப்பு மருந்தை பங்கிட்டு வழங்கும் ஐ.நாவின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் தடுப்பூசிகளைப் பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரானுக்கும் IAEA இற்கும் இடைப்பட்ட அணுசக்தி கண்காணிப்பு ஒப்பந்தம் காலாவதி!
மே 22 ஆம் திகதியுடன் ஈரானுக்கும் ஐ.நாவின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு ஏஜன்ஸியான IAEA இற்கும் இடைப்பட்ட 3 மாத அளவு கொண்ட அணுசக்தி கண்காணிப்பு ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டதாக ஞாயிற்றுக்கிழமை ஈரானின் பாராளுமன்ற பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பாலத்தீனம் இடையே சமரச முயற்சியில் அமெரிக்க, எகிப்து வெளியுறவு அமைச்சர்கள்
சுமார் 11 நாட்கள் நீடித்த இஸ்ரேல் பாலத்தீனம் இடையேயான கடும் மோதல் போக்கு எகிப்தின் தலையீட்டால் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் ஒருமுறை முடிவுக்கு வந்துள்ளது.