கனமழை காரணமாக வெனிசுலா நாட்டில் மேற்கு மெரிடா மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த அனர்த்தத்தில் 20 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்கு வெனிசுலா நாட்டில் காலநிலை மாற்றத்தால் கன மழை பெய்துள்ளது. இதில் ஆண்டிஸ் எனும் பகுதியில் உள்ள மலைக்கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள சாலைகளில் கற்பாறைகள் சரிந்து விழுந்திருப்பதுடன் வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துசெல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 1,200 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டு 17 பேர் காணாமல் போயுள்ளனர்.
இதேவேளை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர்களில் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் நிலச்சரிவு இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளோரை தேடும் பணி தொடர்கிறது.