free website hit counter

"ஈரானுக்கு இராணுவ ஆயுதங்களை வழங்கும்" எந்தவொரு நாட்டிலிருந்தும் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் "எல்லாப் பொருட்களுக்கும்" 50% சுங்க வரி விதிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை தெரிவித்தார்.

உலகை உலுக்கிக் கொண்டிருந்த அமெரிக்க, இஸ்ரேலிய - ஈரான் போரினை  இரு வாரகாலத்துக்கு இடைநிறுத்தம் செய்வதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப்  அறிவித்தார். பாக்கிஸ்தான் முன்னெடுத்த போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில், ஹார்முஸ் நீரிணையைத் திறப்பதற்கு ஈரான் சம்மதிக்க வேண்டும் எனும் கோரிக்கையுடன் அமெரிக்க அதிபர் இடைக்காலப் போர் நிறுத்ததிற்குச் சம்மதம் தெரிவித்திருந்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானில் ஏற்பட்டு வரும் நிகழ்வுகள் குறித்து ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். உலக வரலாற்றின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்று என அவர் வர்ணித்த இந்நிலையில், "இன்றிரவு" ஒரு பெரிய திருப்புமுனை ஏற்படக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு, வடக்கு மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கு பாகிஸ்தானின் சில பகுதிகளை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியதில், ஆப்கானிஸ்தானில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதலால் உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்ததைக் காரணம் காட்டி, பாகிஸ்தான் வியாழக்கிழமை ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் இரண்டாவது முறையாக எரிபொருள் விலையை கடுமையாக உயர்த்தியது.

அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன், ஒரு பகிரங்கக் கடிதத்தை எழுதியுள்ளார். புதன்கிழமை பிற்பகல் X தளத்தில் பெஷெஷ்கியனின் எழுதிய அந்தப் பகிரங்கக் கடிதத்தில், தனது நாட்டுடன் அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தி வரும் போருக்கு மத்தியில், "ஈரானை ஒரு அச்சுறுத்தலாகச் சித்தரிப்பது, வரலாற்று யதார்த்தத்துடனோ அல்லது தற்போதைய கண்கூடாகத் தெரியும் உண்மைகளுடனோ ஒத்துப்போகவில்லை," என்று  எழுதியுள்ளார்.

ஈரான் போரின் அடுத்த கட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா தரைவழிப் படையெடுப்பைத் திட்டமிடுவதாக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது-பாகர் காலிபாஃப் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அத்தகைய தலையீடு பலவந்தமாக எதிர்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மற்ற கட்டுரைகள் …