ஈரான் இன்னும் அணு ஆயுதத்தை விரும்புவதாகவும், இஸ்லாமாபாத்தில் நடந்த சந்திப்பின் போது அந்த எண்ணத்தை வெளிப்படுத்தியதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.
‘‘அவர்கள் அதை இன்னும் விரும்புகிறார்கள், அதை அவர்கள் கடந்த இரவு தெளிவுபடுத்தினர். ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்காது.’’
தெஹ்ரான் ‘‘தனது அணுசக்தி லட்சியங்களைக் கைவிடத் தயாராக இல்லை’‘ என்பதாலேயே ஈரானுடனான நேரடிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாக டிரம்ப் ஏற்கனவே கூறியுள்ளார்.
‘‘இரு தரப்பினரும் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிக அருகில் இருந்தனர், ஆனால் ஈரான் ‘‘அதிகபட்ச நிலைப்பாடு, மாறிக்கொண்டே இருக்கும் இலக்குகள் மற்றும் முற்றுகை’‘ ஆகியவற்றை எதிர்கொண்டது’’ என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி முன்னதாகக் கூறியிருந்தார்.