பூமியின் மிகப்பெரிய மழைக்காடுகளைத் திரும்பப் பெற முடியாத அளவிற்குத் தள்ளும் காடு அழிக்கும் திட்டத்தை தடுக்க தைரியமான நடவடிக்கை தேவை என பழங்குடி குழுக்கள் உலக தலைவர்களை வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 9 நாடுகளை உள்ளடக்கிய அமேசானியப் பிரதிநிதிகள் பிரான்சின் மார்சேயில் நடந்த ஒன்பது நாள் மாநாட்டில் தங்கள் பிரச்சாரத்தைத் தொடங்கினர்,
இந்த மாநாட்டில் ஒன்பது அமேசான்- நாடுகளில் உள்ள பூர்வீகக் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் COICA வின் முன்னணி ஒருங்கிணைப்பாளர் ஜோஸ் கிரிகோரியோ டயஸ் மிராபால், ''எங்கள் வீட்டின் அழிவை மாற்றியமைக்க மற்றும் உலகத்தின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக எங்களுடன் ஒன்றிணைய உலகளாவிய சமூகத்தை அழைக்கிறோம்'' என வேண்டுகோள் விடுத்தார். 2025 க்குள் அமேசானின் 80% பாதுகாக்கும் இலக்கை உலக நாடுகளிடையே பரப்பும் நோக்கத்தை கொண்டதே அமேசானியாஆகும்.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் படி, அமேசான் வனம் 50 சதவிகிதத்திற்கும் குறைவான பகுதிகள் தற்போது சில வகையான அதிகாரப்பூர்வ பாதுகாப்பு அல்லது பழங்குடி நிர்வாகத்தின் கீழ் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் பல்வேறு அழுத்தங்கள் அதிகரித்தும் வருகிறது.
அமேசான் காடு மொத்தமாக 18 சதவீதம் அதன் அசல் வனப்பகுதியை இழந்துள்ளது, மேலும் 17 சதவிகிதம் சீரழிந்துள்ளது என்று 200 விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியின் அடிப்படையில் அமேசானுக்கான அறிவியல் குழு ஜூலை மாதம் வெளியிட்ட ஒரு முக்கிய ஆய்வு தெரிவிக்கிறது.
மார்சீய் கூட்டமானது சமீபத்திய உலக பாதுகாப்பு மாநாடு ஆகும், இது நான்கு வருடங்களுக்கு ஒருமுறை சர்வதேச இயற்கை பாதுகாப்புக்கான ஒன்றியம், அரசாங்கங்கள், சிவில் சமூகம் மற்றும் ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட ஒரு மன்றமாகும். தற்போது இதில் கலந்து கொண்ட அதிகாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் பிரச்சாரகர்கள் அடுத்த ஆண்டு சீன நகரமான குன்மிங்கில் பல்லுயிர் பற்றிய ஐக்கிய நாடுகள் பேச்சுவார்த்தைக்கு அடித்தளமிடவுள்ளனர்.