மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோர் நாட்டில் பிட்காயின் நாளைமுதல் சட்டபூர்வமான பணமாக பாவனைக்கு வருகின்றது.
ஏற்கனவே ஜுன் மாதம் அறிவித்ததற்கமைய இந்த சட்டம் நாளைமுதல் (8) அமுலுக்கு வருகின்றது.
மேலும் பரிவர்தனைக்கலுக்காக இந்நாட்டு அரசு சுமார் $20 மில்லியன் பெறுமதியான 200 பிட்காயின்களை கொள்வனவு செய்துள்ளது. இதற்கமைய இந்நாட்டில் தற்சமையம் 400 பிட்காயின்களை தம்வசம் வைத்திருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
பிட்காயின் பல நாடுகளிலும் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றபோதிலும் அரசினால் சட்டபூர்வமான பணமாக பரிவர்தனை நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அனுமதித்த முதல் நாடு எல் சல்வடோர் என்பது குறிப்பிடத்தக்கது
-வின்சம் -