அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ஓட்டமாவடி அடகஸ்தளத்தில் மேலும் 2,000 அடக்கங்கள் மட்டுமே சாத்தியம்
மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் இயக்குனர் டாக்டர் அன்வர் ஹம்தானி கூறுகையில், மட்டக்களப்பில் உள்ள ஓட்டமாவடி அடகஸ்தளத்தில் சுமார் 2,000 கோவிட் -19 பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்ய மட்டுமே இடம் உள்ளது என கூறியுள்ளார்.
பதவி விலகினார் லொஹான் ரத்தவத்த
பிரதமரின் வேண்டுகோலுக்கினங்க சற்றுமுன் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தார் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்தவத்த.
தொலைபேசிமூலம் லொஹான் ரத்தவத்தவை பதவி விலகுமாறு பிரதமர் உத்தரவு
அநுராதபுர சிறைச்சாலையில் கைதிகளை கைத்துப்பாக்கியின் மூலம் அச்சுறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்தவத்த.
மத்தல விமான நிலையத்திற்கு பாதுகாப்பு
ஹம்பந்தோட்டையின் மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் மற்றும் அதன் அண்டிய பகுதிகளில் இன்று (15) பெருமளவு பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாடு விரைவில் மீண்டும் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு
கொரோனா வைரஸ் தொடர்பான தற்போதைய முன்னேற்றங்களின் அடிப்படையில் நாடு விரைவில் மீண்டும் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்.
"கோவிட் நிலைமை இன்னும் திருப்திகரமான நிலையை எட்டவில்லை "- சுகாதார அமைச்சகம்
கோவிட் -19 நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் சிறிதளவு குறைவு இருந்தபோதிலும், நிலைமை இயல்பு நிலைக்கு வர இன்னும் சாதகமாக இல்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.