free website hit counter

2024 இல் இலங்கையின் பொருளாதாரம் 1.7% வளர்ச்சியடையும் என உலக வங்கி கணித்துள்ளது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இலங்கையின் பொருளாதாரம் 2024 ஆம் ஆண்டில் 1.7 வீதத்தாலும் 2025 ஆம் ஆண்டில் 2.4 வீதத்தாலும் வளர்ச்சியடையும் என உலக வங்கி கணித்துள்ளது.
உலக வங்கியின் கூற்றுப்படி, நாட்டின் பொருளாதாரம் 2023 இல் 3.8 சதவீத மறையான வளர்ச்சியைப் பதிவு செய்தது என மதிப்பிடப்பட்டுள்ளது.

2022-2023 நிதியாண்டில் இலங்கையின் உற்பத்தியும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ள போதிலும், இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், குறிப்பாக தனியார் கடன் வழங்குநர்களுடன் இலங்கைக்கான கண்ணோட்டம் நிச்சயமற்றதாகவே உள்ளது என்று அது கூறியது.

தெற்காசியாவின் வளர்ச்சி 2023 ஆம் ஆண்டில் 5.7 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இருப்பினும் இது வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் பொருளாதாரப் பகுதிகளில் மிக வேகமாக உள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

ஆதாரம்: சின்ஹுவா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula