free website hit counter

மின் கட்டண குறைப்பால் நீர் கட்டணம் குறையும்: அமைச்சர்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
மின்சாரக் கட்டணக் குறைப்புக்கு அமைவாக நீர்க் கட்டணத்தைக் குறைக்கும் வகையில் நீர் கட்டணச் சூத்திரமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்து விலைச் சூத்திரம் வகுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது, மின் கட்டணம் அடுத்த மாதம் குறைக்கப்படும் என மின்வலு அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும், நீர் விநியோக செலவு குறைவதால், அதற்கேற்ப தண்ணீர் கட்டணத்தையும் குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula