கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்யும் போது TRCSL பதிவை உறுதிப்படுத்துமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
TRCSL இணக்கப் பணிப்பாளர் மேனகா பத்திரன, கேள்விக்குரிய தொலைபேசி TRCSL-ல் பதிவுசெய்யப்பட்டதா என்பதை வாங்குவதற்கு முன் சரிபார்க்குமாறு தனிநபர்களுக்கு அறிவுறுத்தினார்.
TRCSL இல் கையடக்கத் தொலைபேசி பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த, தனிநபர்கள் தொலைபேசியின் IMEI எண்ணுடன் SMS ஒன்றை அனுப்ப முடியும் என பத்திரன தெரிவித்தார்.
பதிவு நிலையைச் சரிபார்க்க, “IMEI<இடைவெளி> 15 இலக்க IMEI எண்” என்ற வடிவில் 1909 க்கு SMS அனுப்பவும்.