இந்தோனேசியாவில் நடைபெற்ற 10வது உலக நீர் மன்ற உயர்மட்டக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கோடீஸ்வர தொழிலதிபர் எலோன் மஸ்க்கைச் சந்தித்து Starlink ஐ இலங்கையில் அமுல்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடினார் என ஜனாதிபதி அலுவலகம் கூறியது.
Starlink என்பது தொலைதூர இடங்களுக்கு குறைந்த விலையில் இணையத்தை வழங்குவதற்காக தனியார் விண்வெளிப் பயண நிறுவனமான SpaceX ஆல் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் நெட்வொர்க் ஆகும்.