free website hit counter

இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி நீக்கம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அவரது அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பதவிகளில் இருந்து ரொஷான் ரணசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கையொப்பமிட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூலை 2022 இல் அரசுக்கு எதிரான போராட்டங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் கீழ் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராகவும் நீர்ப்பாசன அமைச்சராகவும் ரொஷான் ரணசிங்க நியமிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும், கிரிக்கெட் விளையாட்டு மற்றும் இலங்கை கிரிக்கெட் (SLC) தொடர்பான நெருக்கடி காரணமாக ஜனாதிபதிக்கும் ரொஷான் ரணசிங்கவிற்கும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டில் ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தியதன் காரணமாக, ஜனாதிபதி தம்மை குற்றஞ்சாட்ட முயற்சிப்பதாக ரொஷான் ரணசிங்க குற்றம் சுமத்தியதை அடுத்தே இந்த பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: