லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை இன்று (ஏப்ரல் 01) முதல் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 12.5 கிலோ சிலிண்டரின் விலை ரூ.135 குறைக்கப்பட்டு ரூ.4,115 ஆகவும், 05 கிலோ சிலிண்டரின் விலை ரூ.55 குறைக்கப்பட்டு ரூ.1,652 ஆகவும் உள்ளது.
இதேவேளை, 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 23 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலையான 772 ரூபாவாக உள்ளது.