இலங்கையின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும், இரு நாடுகளின் மின் கட்டங்களை இணைக்கவும், அண்டை நாடுகளுக்கு இடையே பெட்ரோலிய குழாய் பதிக்கவும் பணிபுரியும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை அறிவித்தார்.
புதுடெல்லியில் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி இதனை தெரிவித்தார்.
பிரத்யேக டிஜிட்டல் அடையாள திட்டத்தில் இலங்கையுடன் இந்தியா ஒத்துழைக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அபிவிருத்திக்கு இந்தியாவின் வலுவான ஆதரவை அவர் எடுத்துரைத்தார். "இலங்கைக்கு இந்தியா இதுவரை 5 பில்லியன் டாலர்கள் கடன் மற்றும் மானிய உதவிகளை வழங்கியுள்ளது. இலங்கையின் 25 மாவட்டங்களிலும் எங்களிடம் ஒத்துழைப்பு உள்ளது, மேலும் எங்கள் திட்டங்களின் தேர்வு எப்போதும் பங்காளி நாடுகளின் அபிவிருத்தி முன்னுரிமைகளை அடிப்படையாகக் கொண்டது." அவர் கூறினார்.
மஹோ-அநுராதபுரம் புகையிரத சமிக்ஞை அமைப்பு மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் புனரமைப்புக்கு உதவி வழங்குவதற்கான இந்தியாவின் முடிவையும் அவர் அறிவித்தார்.