free website hit counter

மீண்டும் எரிபொருள் விலையில் மாற்றம்??

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
வாரத்திற்கு 5 லீற்றரில் இருந்து ஒரு நாளுக்கு 5 லீற்றராக அதிகரிக்குமாறு கோரிக்கை.
ஏப்ரல் மாத எரிபொருள் விலை திருத்தத்தின் மூலம் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதன் பயனை பொது மக்களுக்கும் பெற்றுக்கொடுக்கவுள்ளதாக மினுவாங்கொடையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் அவர்களின் எரிபொருள் ஒதுக்கீட்டை வாரத்திற்கு 5 லீற்றரில் இருந்து ஒரு நாளுக்கு 5 லீற்றராக அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், 80,000 வேட்பாளர்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான நிதியை ஏற்பாடு செய்ய 6 மாதங்கள் ஆகும் என்றும் அது தேர்தல் ஆணையத்திடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க, இந்த நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டியது அவசியம் என்று அமைச்சர் மேலும் கூறினார்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: