தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு (NWSDB) கட்டணச் சூத்திரத்தின் அடிப்படையில் நீர்க் கட்டணங்களைக் குறைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, வீட்டு உபயோகப் பயனீட்டாளர்களின் குடிநீர் கட்டணம் 7%, அரசு மருத்துவமனைகளில் 4.5%, பள்ளிகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களுக்கு 6.3% குறைக்கப்பட உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.