இலங்கையில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்ட நேரத்தில், நாட்டின் எந்தவொரு பொது இடங்களிலும் மக்கள் நடமாட்டம் கூடாது எனும் மற்றுமொரு தடை உத்தரவு நாடாளவியரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகிறது.
வீதி, பூங்கா, மைதானங்கள், புகையிரத வீதிகள், கடற்பரப்புக்கள் போன்ற பொது இடங்களிலும் மக்கள் நடமாடுவதைத் தடை செய்யும் பொருட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஆயினும், பாதுகாப்பு அமைச்சு அல்லது பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்கள், பொலிஸ் மா அதிபர் அல்லது வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்றவர்களுக்கு விதிவிலக்குகள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை(03.04.22) நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் பல நடைபெறவுள்ளதாக வெளிவந்த தகவல்களையடுத்தே அந்த ஆர்ப்பாட்டங்களை முடக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.