இலங்கையின் தென்பகுதியில் ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலைகள் காரணமாக, இந்திய இராணுவத்தின் உதவி கோரப்பட்டதாகவும், இந்தியப்படைகள் தென்பகுதியில் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் அனைத்தம் உன்மைக்குப் புறம்பானவை.
நேற்று முதலே சமூகவலைத்தளங்களில் இவ்வாறான தகவல்கள் பரவி வந்த நிலையில், இவை அனைத்தும் உண்மைக்குப் புறம்பான செய்திகள் என, கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான பொறுப்புணர்வற்ற செய்திகளை உயர் ஸ்தானிகராலயம் கண்டிப்பதுடன், இவ்வாறான வதந்திகளை பரப்புவதை தவிர்க்கவேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தவிர மேலும் சில பொய்யான தகவல்களும், சமூகவலைத்தளக் குழுமங்களில் பரப்பப்பட்டு வருவதாகவும் அறியவருகிறது. இவை தொடர்பான விடயங்களில் பொது மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும் என அரச தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.