நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை முழுமையாக அகற்றுவற்கான வேலைத் திட்டங்களை அரசாங்கம் முழுமூச்சுடன் மேற்கொண்டுவருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஆகவே, பொது மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்கினால் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் மீள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்டத்திற்கு முதற் கட்டமாக தடுப்பூசிகளை வழங்கியுள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்த அமைச்சர், ஏனைய மாவட்டங்களுக்கும் அடுத்த கட்டங்களில் தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தார்.
ஜனாதிபதியினால் யாழ். மாவட்டத்திற்கு முதற் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்ட 50 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கும் வேலைத்திட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த வைக்கப்பட்டது.