free website hit counter

அரச உத்தியோகத்தர்களுக்கான 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு நடைமுறைக்கு வரும் காலம் குறித்து அறிவிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
வரவு செலவு திட்ட முன்வைப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் காலம்.
வரவு செலவு திட்ட முன்வைப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு எதிர்வரும் வருடம் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் தொடக்கம் இந்த 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான கொடுப்பனவு அக்டோபரிலிருந்து 6 மாத காலத்துக்குள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது “இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அரச உத்தியோகத்தர்கள் , வறுமையான மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள், சிறிய மற்றும் மத்திய தர தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக” நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டினார்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: