செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை விருதை ஐசிசி (ICC) அறிவித்தது
"இது தான் என்னுடைய கடைசி உலகக் கோப்பை" - லியோனல் மெஸ்ஸி
சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடர் - இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
இறுதி டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி தொடரை கைப்பற்றியது
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. அந்த அணி தொடக்க வீரர் கேமரூன் கிரீன் 52 ரன்னில் அவுட்டானார். கேப்டன் ஆரோன் பின்ச் 7 ரன்னிலும், ஸ்டீவ் ஸ்மித் 9 ரன்னிலும், மேக்ஸ்வெல் 6 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். டிம் டேவிட் 54 ரன் அடித்தார்.
இதையடுத்து 187 ரன் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் கே.எல். ராகுல் ஒரு ரன்னுடன் வெளியேற, கேப்டன் ரோகித் சர்மா 17 ரன் எடுத்தார். பின்னர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடிய விராட் கோலி 48 பந்துகளில் 63 ரன்னும், சூரியகுமார் யாதவ் 36 பந்துகளில் 69 ரன்னும் எடுத்தனர்.
ஹர்திக் பாண்ட்யா 25 ரன் அடித்த நிலையில் களத்தில் இருந்தார். இந்திய அணி 19.5 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
போட்டியின் ஆட்டநாயகனாக சூரியகுமார் யாதவும்
தொடரின் ஆட்டநாயகனாக அக்சர் படேலும் தெரிவானார்கள்.
2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்தியா அணி வெற்றி
முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 8 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 90 ரன் அடித்தது.
கேப்டன் ஆரன் பிஞ்ச் 31 ரன் அடித்தார். அதிகபட்சமாக மேத்யூ வாட் 43 ரன் குவித்து களத்தில் இருந்தார்.
இந்தியா தரப்பில் அக்சர் படேல் 2 விக்கெட்களையும், பும்ரா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர் 91 ரன் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 10 ரன்னுக்கு வெளியேறினார். சிறப்பாக விளைடியாக கேப்டன் ரோகித் சர்மா 46 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். விராத் கோலி 11 ரன்னும், பாண்ட்யா 9 ரன்னும் எடுத்தனர். தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 10 ரன் அடித்தார்.
7.2 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன் குவித்த இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1-1 என்ற சமன் நிலையில் உள்ளது.