free website hit counter

சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டம்! அரையிறுதியில் இந்தியா!

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

டி20 உலகக் கோப்பைத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் திடலில் இன்று (மார்ச் 1) நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் 52-வது போட்டியில் இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ராஸ்டன் சேஸ் 25 பந்துகளில் 40 ரன்கள் (5 பௌண்டரிகள் - ஒரு சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து, ஜேசன் ஹோல்டர் 22 பந்துகளில் 37 ரன்களும் (2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), ரோமன் பௌவல் 19 பந்துகளில் 34 ரன்களும் (3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்தனர்.

கேப்டன் சாய் ஹோப் 32 ரன்கள், ஷிம்ரன் ஹெட்மேயர் 27 ரன்கள் மற்றும் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு 14 ரன்கள் எடுத்தனர்.

இந்தியத் தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும், ஹார்திக் பாண்டியா மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

சஞ்சு சாம்சன் அதிரடி

பின்னர், 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன் இருவரும் நிதானமாக ரன்குவிப்பில் ஈடுபட்டனர்.

அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் இருவரும் தலா 10 ரன்கள், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 18 ரன்கள், திலக் வர்மா 27 ரன்கள், ஹார்திக் பாண்டியா 17 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். 2

கடைசி ஓவரில் இந்திய அணிக்கு 7 ரன்கள் தேவையாக இருந்த நிலையில், தொடக்கம் முதலே அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் ஒரு பௌண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி இந்திய அணியை வெற்றிப் பெற வைத்தார். 50 பந்துகளில் 12 பௌண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 97 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மேற்கிந்தியத் தீவுகள் அணித் தரப்பில் ஜேசன் ஹோல்டர், சமர் ஜோசப் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அரைசதம் விளாசிய சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் இதுவரை 170 ரன்களுக்கு மேல் சேஸ் செய்தது இல்லை என்ற வரலாற்றையும் இந்திய அணி மாற்றி புதிய சாதனையும் படைத்துள்ளது.

மும்பையில் வருகிற 5 ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: