free website hit counter

ஆட்சியை நோக்கி தவெக! அடுத்த இடத்தில் திமுக!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இதுவரை வெளியான முடிவுகளில் 108 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மை பெற்று 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் தனிப்பெரும் கட்சி தவேக வென்றுள்ளது.

அடுத்த இடத்தில் திமுக இருந்தாலும், ஏற்கனவே இரண்டு முறை வென்ற கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினே தோல்வியடைந்திருப்பது திமுகவினருக்கு மட்டுமல்ல, திமுகவுக்கு வாக்களித்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாவது இடத்தில் அதிமுக உள்ளது. தமிழ்நாட்டில் 167 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 44 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி பின்னடைவை சந்தித்தபோதும், அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்ட தவேக தலைவர் விஜய், இரண்டு தொகுதிகளிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

தனிப்பெரும்பான்மை என்ற 118 தொகுதிகளில் வென்று தவேக ஆட்சியைப் பிடிக்குமா? பெரும்பான்மைக்கு ஒரு சில எண்ணிக்கை குறைந்துள்ளது, மற்ற கூட்டணிகளில் இடம்பிடித்துள்ள காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் தவேக பேச்சுவார்த்தை நடத்தி, ஆதரவு பெற்று பெரும்பான்மை பலத்தை உறுதி செய்யுமா என்பது, அடுத்தடுத்து வெளியாகும் வாக்கு எண்ணிக்கை சுற்று முடிவு பொருத்தே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula