free website hit counter

தமிழகத்தில் வருகின்ற ஜூலை 5 ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழகத்தில் வருகின்ற ஜூலை 5 ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் இவ்வாண்டு தொற்றுப்பரவல் அதிகமாகி தற்போது பரவலின் வேகம் குறைந்து வருகிறது. எனினும் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் கடந்த மேமாதம் முதல் ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஒவ்வொரு வாரமும் நீட்டிக்கப்பட்டுவந்தது.

இந்நிலையில் இறுதியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் ஜூன் 28ஆம் திகதி முடிவடையும் நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் தமிழகத்தில் வரும் ஜூலை 5ஆம் திகதி வரை ஊரடங்கு பல தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா தொற்றுப்பரவல் குறைவடைந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் பணி தொடர்பான செயல்பாடுகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதில் முக்கியமாக மாவட்டத்திற்குள் பொது பஸ் போக்குவரத்து தொடங்கவுள்ளதுடன் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது, மேலும் பார்சல் சேவை, கட்டுமான பணிகள், இ-சேவை மையங்கள் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு திரைத்துரை தொடர்பான பணிகளுக்கும் படப்பிடிப்புகள் 100 நபர்களுடன் நடாத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: