இந்தியாவின் ஜம்மு விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரு குண்டுவெடிப்பு நிகழ்ந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று நள்ளிரவு ஜம்மு விமான நிலையத்தில் 5 நிமிட இடைவெளியில் முதல் குண்டுவெடிப்பு மேற்கூரையிலும், இரண்டாவது குண்டுவெடிப்பு தளத்திலும் ஏற்பட்டுள்ளது. இதனால், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
விமான நிலையம் தற்போது பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து மூத்த அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
ஜம்மு விமானப்படை நிலையத்தில் இந்த ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு, பி.எஸ்.எஃப் இன் மூத்த அதிகாரிகள் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்துள்ளதாக மேலதிக செய்திகள் தெரிவிக்கின்றன,