சட்டசபை தேர்தலுக்காக தமிழகத்தில் மீண்டும் அதிமுகவும் பாஜகவும் கை கோர்த்துள்ளது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் கூட்டணி அமைத்து சந்திக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி நிச்சயம் அமையும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர். ஆனால் தேர்தலுக்கும், கூட்டணிக்கும் இன்னும் காலம் இருக்கிறது, யாருடன் கூட்டணி என்பதை அப்போது அறிவிப்போம், நிச்சயம் வலுவான கூட்டணி அமையும் என்று இ.பி.எஸ்.,சும், அ.தி.மு.க., முக்கிய தலைவர்களும் கூறி
வந்தனர்.
சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்து பேசினார். இதன் பிறகு, இ.பி.எஸ்., அமித் ஷாவை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா, பா.ஜ, தலைவர்களும், அ.தி.மு.க., தலைவர்களும் ஒன்றாக இணைந்து கூட்டணியை உருவாக்கி உள்ளார்கள் என்றும் அடுத்து வரும் தேர்தலை தே.ஜ., கூட்டணியுடன் இணைந்து சந்திப்போம் எனவும் தெரிவித்தார்.
தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும், தமிழகத்தில் இ.பி.எஸ்., தலைமையிலும் தேர்த்லை சந்திப்போம் எனவும் அவர் அமித்ஷா கூறினார். அதிமுக தலைவர்கள் சிலர் பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை என கூறிவந்த நிலையில், அமித்ஷாவின் புதிய அறிவிப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.