1 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடத்திட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை குறைத்து அறிவித்துள்ளது.
இதனையடுத்து 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடத்திட்டம் 50 சதவீதம் வரையில் குறைக்கப்பட்டுள்ளது. 1-2ம் வகுப்புகளுக்கு 50 சதவீதம், 3-4ம் வகுப்புகளுக்கு 49 சதவீதம், 5ம் வகுப்பிற்கு 48 சதவீதம், 6ம் வகுப்பிற்கு 47 சதவீதம், 7-8ம் வகுப்புகளுக்கு 46 சதவீதம், 9ம் வகுப்பிற்கு 38 சதவீதம், 10ம் வகுப்பிற்கு 39 சதவீதம், 11-12ம் வகுப்புகளுக்கு 35 சதவீதம் வரையிலும் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வில் பங்கேற்க விரும்புவர்கள் முழு பாடத்திட்டத்தையும் படித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.