தடுப்பூசிகள் போடப்பட மூன்று முக்கிய நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகளை இத்தாலி அனுமதிக்கதொடங்கியுள்ளது.
இத்தாலியில் கோவிட்-19 காரணமாக பலமாதங்களாக உணவு வணிகங்கள் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேற்றையதினம் பிரதமர் மரியோ டிராகி கூறியிருந்த அறிக்கையின் படி அமெரிக்கா, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் இத்தாலிக்குள் வர சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிவழங்கப்படுகிறார்.
பயணம் மேற்கொள்ளவுள்ள சுற்றுலாப்பயணிகள் தடுப்பூசி போடப்பட்டவர்களாக இருக்கவேண்டும் எனவும்; கோவிட்-19 நோயிலிருந்து மீண்டதுக்கான சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கோவிட்-19 பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்கவேண்டும் எனும் விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இத்தாலிய ஹோட்டல் மற்றும் உணவக வணிகங்களுக்கு மிகவும் தேவையான ஊக்கத்தை அளிக்க, அமெரிக்கா, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்க இத்தாலியின் தலைவர் முயல்கிறார்.
சுமார் ஒன்றரை வருட சிரமத்திற்குப் பிறகு இத்தாலி உணவகங்கள் மற்றும் உணவுசார்ந்த வணிகங்களுக்கு உதவும் நோக்கில் சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பாக இத்தாலிக்கு வர அனுமதிக்க விரும்புவதாக பிரதமர் மேலும் கூறியிருந்தார்.