சுவிற்சர்லாந்தில் "கடைகளுக்குள் முகமூடியை விரைவில் அகற்ற வேண்டும் என சுவிஸ் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பெரிய விநியோகஸ்தர்கள் அங்கம் வகிக்கும் வணிக சங்கம், கூட்டாட்சி அரசுக்கு முறையீடு செய்துள்ளது.
சுவிஸ் மத்திய அரசு அன்மையில் நடைமுறைப்படுத்திய படிப்படியான தளர்வின் நீட்சியைக் குறிக்கும் வகையில், முகமூடியின் பயன்பாடு விரைவில் முற்றாக அகற்றப்பட வேண்டும். ஆயினும் கடைகள் மற்றும் மால்களில் மூக்கு மற்றும் வாய் பாதுகாப்பு கோடை முழுவதும் கட்டாயமாக இருக்க வேண்டும் எனும் அரசின் கருதுகோளுக்கு எதிராக இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
முகமூடித் தேவைக்கு இனிப் புரிந்துகொள்ளக்கூடிய அல்லது சொல்லக் கூடிய நியாயங்கள் எதுவும் இல்லை எனவும், ஊழியர்கள் இதனால் சிரமப்படுவதாகவும், எனவே கடைகளுக்குள் நுழைவதற்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், சுவிஸ் சில்லறை கூட்டமைப்பு, 6,000 பெரிய சிறிய வர்த்தக நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வர்த்தக அமைப்பின் தலைவர் கிறிஸ்டா மார்க்வால்டர் செய்திச் சேவைகளிடம் தெரிவித்துள்ளார். இந்தக் கோரிக்கைக்கான மத்திய கூட்டாட்சி அரசு செவிசாய்த்ததா இல்லையா என்பது நாளை புதன்கிழமை அரசின் அறிவிப்பில் தெரிய வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.