free website hit counter

மூலிகை அறிவோம் - அகத் தீ தணிக்கும் அகத்தி

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
சுட்டெரிக்கும் வெயில் காலங்களில் எமது உடல் அதிகளவு வெப்பத்தால் பாதிக்கப்படும்.
இதனால் வாய்ப்புண் முதல் அம்மை நோய்கள் வரை எம்மை தாக்க கூடும். இதனை தவிர்க்க அதி உஷ்ண காலங்களில் அகத்தி கீரையை அதிகம் உணவில் சேர்ப்பது நன்மை பயக்கும்.

தாவரவியல் பெயர்- Sesbania grandiflora
குடும்ப பெயர்- Leguminosae
ஆங்கிலப் பெயர்- Swamp pea
சிங்கள பெயர்-Katuru_murunga
சமஸ்கிருத பெயர்- Agastya
வேறு பெயர்கள்- அச்சம், முனி, கரீரம்

பயன்படும் பகுதி- இலை, பூ, மரப்பட்டை, வேர்ப்பட்டை

சுவை- கைப்பு
வீரியம்- சீதம்
விபாகம்- கார்ப்பு

வேதியியல் சத்துக்கள்-
Flowers & Leaves-
Calcium
Iron
Vitamin-B
Saponin
Galactose
Grandiflorol


Bark-
Tannin
Gum

மருத்துவ செய்கைகள்-
Antidote- விடம் அகற்றி
Astringent-துவர்ப்பி Digestive- செரிப்புண்டாக்கி Febrifuge- வெப்பம் அகற்றி
Laxative- மலமிளக்கி Refrigerant-குளிர்ச்சி உண்டாக்கி
Tonic- உடல் உரமாக்கி


தீரும் நோய்கள்- வெப்ப நோய்கள், வாய்ப்புண், நீர்க்கோவை, தலைவலி, பைத்தியம், மேக நோய், அதிக தாகம், உடல் எரிவு, வாதவீக்கம், கீல்வாதம்

பயன்படுத்தும் முறைகள்-
இக்கீரை மருந்தின் வீரியத்தையும் செய்கையையும் கெடுக்கும். அதனால் நோயாளிகளுக்கு மருந்து கொடுக்கும் காலங்களில் இது நீக்கப்படுகிறது. மற்றைய காலங்களில் நாள்தோறும் வேண்டும்பொழுது கறியாக சமைத்து உண்ண நல்ல குணங்களை கொடுக்கும்.

தினந்தோறும் உண்டால் வாயுவை உண்டாக்கும்; ரத்தத்தையும் முறித்து சோகை, பாண்டு முதலிய பிணிகளையும் நோய்களையும் விளைவிக்கும்.

இக்கீரையின் சாற்றைப் பிழிந்து மூக்கில் இரண்டொரு துளி விட நான்காம் முறை சுரம் விலகும். சாதாரணமாக உடம்பின் மேல் பூசிவர வெப்பம் தணியும்.

தலையில் பூசி தலை முழுக பைத்தியம் நீங்கும்.

இலை சாறு ஒரு பங்கு தேன் 5 பங்கு கூட்டி நன்றாய் கலந்து உச்சியில் விரலால் தடவ சிறுவர்களுக்கு காணும் நீர்க்கோவை போகும். இதையே மூக்கில் விட நீர்க்கோவை, தலைவலி இவைகள் தீரும்.

இலையை அரைத்து புற்கை செய்து காயங்களுக்கு கட்டலாம்.

செவ்வகத்தி இலை
இதனை சமைத்து உண்டால் கபத்தை விருத்தி செய்யும்.

அகத்திப்பூ
இலையை சமைப்பது போல இதன் பூவையும் சமைத்து உண்ண வெப்பத்தினாலும் புகையிலை சுருட்டு முதலியவற்றினாலும் தோன்றிய பித்த தோஷத்தையும் உடலில் தோன்றும் வெப்பத்தையும் தணிக்கும்.

பூச்சாற்றை கண்களில் இட கண் மறைவு நீங்கும்.

செவ்வகத்தி பூ மூக்கின் வழியாய் வரும் இரத்தத்தை விரைவில் நிறுத்தும்.

உள் வெப்பத்தையும் போக்கும்.

மரப்பட்டை அகத்தி மரப்பட்டையை விதிப்படி குடிநீர் செய்து அம்மை நோய் சுரம் அல்லது அதற்கு சமமான இதர விஷ சுரங்களுக்கு ஆரம்பத்தில் கொடுக்கலாம்.

வேர்ப்பட்டை மேகம், தாகம், மெய்எரிவு, கையெரிவு, ஐம்பொறிகளை சேர்ந்த எரிவு ஆகிய இவைகளை போக்கும்.

வேர்பட்டையை விதிப்படி ஊறல் செய்து குடிநீராய் உட்கொள்ள வெப்ப பிணிகள் தணியும்.

செவ்வகத்தி வேர்ப்பட்டை, ஊமத்தன் வேர் இவ்விரண்டையும் அரைத்து வாத வீக்கம், கீல்வாதங்களுக்கு பற்றிடலாம்.

~சூர்யநிலா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula