கோடையின் கொடும் வெயில் வெப்பம் தணிக்கவே ஒரு குடுவைக்குள் தண்ணீர
தாவரவியல் பெயர்-Lagenaria vulgaris
குடும்ப பெயர்-Cucurbitaceae
ஆங்கிலப் பெயர்- Bottle gourd
சிங்கள பெயர்- Diya_labu
சமஸ்கிருத பெயர்- Alabu
வேறு பெயர்கள்- சுரை
பயன்படும் பகுதி-
இலை,கொடி,காய்,விதை
சுவை- இனிப்பு
வீரியம்- சீதம்
விபாகம்- இனிப்பு
வேதியியல் சத்துக்கள்-
Fruit-
Niacin
Riboflavin
Aneurin
Iron
Calcium
Phosphorus
Vitamin-B
Seeds-
Fixed oil
Saponin
மருத்துவ செய்கைகள்-
இலை
Purgative-நீர் மலம் போக்கி
காய், விதை
Antibilious-பித்த சமனி
Diuretic-சிறுநீர் பெருக்கி
Nutritive-உடல் உரமாக்கி
Refrigerant-குளிர்ச்சி உண்டாக்கி
தீரும் நோய்கள்- கொழுந்து, இலை சோபை, முத் தோஷம் மலக்கட்டு, நீர்க்கட்டு
காய்
தலைவலி, இருமல், உட்சூடு நீங்கும்.
இலை, கொடி
வீக்கம், சிறுநீர் சிக்கல் விலகும்.
கொடியால் பைத்தியரோகம் போகும்.
பயன்படுத்தும் முறைகள்-
இது கோடைகாலம் ஆகையால் உடலில் தண்ணீரின் தேவைப்பாடு மிகவும் அதிகமாகும். இப்பருவத்தில் அதிகம் அறுவடை செய்யப்படும் காய்கறிகளில் ஒன்றான சுரைக்காய் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கக் கூடியது. எனவே இதனை தினமும் சமைத்து சாப்பிட்டால் உடலில் தண்ணீரின் தேவையை ஈடு செய்து பல பிணிகளை அதுவே போக்கி விடும்.
இலையைக் கஷாயமிட்டு சர்க்கரை கலந்து காமாலை நோய்க்குக் கொடுக்கலாம்.
சம்மூலக் கஷாயத்தை (whole plant) வீக்கம், பெருவயிறு(ascites) நீர்க்கட்டு இவைகளுக்கு கொடுப்பது வழக்கம்.
கொடியை சிறுநீர் பெருக்கும் குடிநீரில் சேர்த்து கொடுப்பது வழக்கம்.
சுரைக்காயின் உட்பாகத்தை வெப்பத்தினால் உண்டாகும் தலைவலிக்கு நெற்றியில் வைத்து கட்டலாம். காந்தல்வாதத்துக்கு பாதத்தின் உட்புறம் வைத்து கட்ட எரிச்சல் தணியும்.
சுரைக்காய் இருமலைத் தணிக்கும்.
சுரைக்காய் குடுக்கையை சுட்ட கரியைப் இரசவே காட்டுக்கு(இரச நஞ்சு) கொடுக்கலாம்.
காட்டு சுரைக்காய்ச் சாம்பலுடன் தேன் சேர்த்து கண்ணிலிட மாலைக்கண் நீங்கும்.
இதன் சாற்றுடன் எண்ணெய் சேர்த்து காய்ச்சி கண்டமாலை போடக் குணமாகும்.
~சூர்யநிலா