free website hit counter

மூலிகை அறிவோம் - அறிவை வளர்க்கும் வல்லாரை

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
நூல் எடுத்து கல்லாத நம் முன்னோர் வாக்கு - நல் அறிவை வளர்க்க ஒரு கைப்பிடி வல்லாரை போதும். அட வல்லாரையில் அப்படி என்ன விசேஷம்? வாருங்கள் நம் மருத்துவ உரையில் விரிவாக பார்க்கலாம்.
தாவரவியல் பெயர்- Centella asiatica
குடும்ப பெயர்- Umbelliferae
ஆங்கிலப் பெயர்- Indian pennywort
சிங்கள பெயர்- Hin_gotukola
சமஸ்கிருத பெயர்- Divya, Supriya, Tvashti
வேறு பெயர்கள்-
சண்டகி, பிண்டீரி, யோசன வல்லி
பயன்படும் பகுதி - சமூலம்

சுவை- துவர்ப்பு,கைப்பு, இனிப்பு
வீரியம்- சீதம்
விபாகம்- இனிப்பு

வேதியியல் சத்துக்கள்-
Alkaloids , Hydrocotyline , Volatile oil, Vellarine Phosphorus, iron, calcium, Vitamin-B, yellow neutral gum, centelloside

மருத்துவ செய்கைகள்-
Alterative-உடல் தேற்றி
Diuretic-சிறுநீர் பெருக்கி
Emmenagogue-ருது உண்டாக்கி Stimulant-வெப்பமுண்டாக்கி
Tonic-உரமாக்கி

தீரும் நோய்கள்-
வாய்ப்புண், மலக் கழிச்சல், இரத்த கிரகணி, வயிற்றுக் கடுப்பு, நரம்பு பலவீனம், ஞாபகமறதி

பயன்படுத்தும் முறைகள்-
எல்லா சுரங்களுக்கும் இதன் இலை, துளசி இலை, மிளகு இவைகளை சம எடை எடுத்து அரைத்து நூற்றி முப்பது மில்லிகிராம் அளவு காலை, மாலை 2 வேளையும் கொடுத்துவர அவை சாந்தப்படும்.

இலையை அரைத்து வைத்துக்கட்ட யானைக்கால், அண்டவீக்கம், வாதவீக்கம், கட்டிகளின் வீக்கம், அடிபட்டு தசை சிதைந்துண்டான வீக்கம் குணமாகும். அல்லது இந் நோய்களுக்கு இலைச் சாற்றை பிழிந்தும் பூசலாம். மேலும் இந்த நோய்களினால் தோன்றும் சுரம் தணிய 4,5 துளி வீதம் நாள் ஒன்றுக்கு மும்முறை கொடுத்துவரலாம்.

குழந்தைகளுக்கு உண்டாகும் சருமநோய்கள், இரத்தக் கேடு, நரம்பு வியாதிகள் முதலியவைகளுக்கும், முதிர்ந்த வயதுடையோர் களுக்கு உண்டாகும் மேகம், வயிற்று நோய், சுரம் முதலியவைகளுக்கும் இலைச் சாறும் பசுவின் பாலும் அதிமதுர தூளும் சேர்ந்து கலந்து கொடுத்து வர மிகுந்த பலன் தரும்.

குழந்தைகளுக்கு உண்டாகும் சீதபேதி, இரத்த கிரகணி, வயிற்றுக் கடுப்பு முதலிய கோளாறுக்கு 3,4 இலை எடுத்து சீரகம், சர்க்கரை கூட்டி அரைத்துக் கொடுத்தும், அல்லது தனி இலையை மாத்திரம் அரைத்து கொப்பூழ் மீது பற்றிட்டு வர அவை நீங்கி குழந்தை சுகப்படும்.

இரத்தக் கொதிப்பால் உண்டாகும் கொப்புளங்களை போக்க இலை சுரசத்துடன் கடப்பம்பட்டை,கருஞ்சீரகம்,நெய் சேர்த்து பூசலாம்.

இலை ஐந்து அல்லது ஆறு எடுத்து 4 - 5 மிளகு, ஒரு சிறு பூண்டு கூட்டி அரைத்து காலை மாத்திரம் கொடுத்துவர மோரும் சோறுமாக உண்டுவர குஷ்டம் குஷ்டத்தினால் உண்டாகும் காயங்கள் நீங்கும். 20 தொடக்கம் 40 நாள் கொடுக்க வேண்டும்.

குஷ்டம், நெறிக்கட்டி, மேகம் முதலிய நோய்களுக்கும் அவைகளினால் உண்டாகும் புண்களுக்கும் இலைச் சூரணம் 260mg வீதம் தினம் ஒன்றுக்கு மும்முறை கொடுத்தும் சூரணத்தில் சிறிது எடுத்து புண்கள் மீது தூவியும் அல்லது பச்சை இலையை அரைத்துக் கட்டியும் வர புண்கள் எளிதில் ஆறும். சூரணத்தில் 260-650mg வரை எடுத்து பசுவின் பாலில் கலந்து கொடுத்து வர ஞாபக சக்தி உண்டாகும். மூளையும் பலப்படும்.

பைத்தியம், அடி வயிறு சம்பந்தமான வியாதிகளில் உண்டாகும் நரம்பு பலவீனம் இவைகளுக்கு இதன் சமூல சூரணம் 5 பங்கு, கோட்டம் 4 பங்கு, தேன் 6 பங்கு வீதம் கூட்டி அரைத்து 260mg அளவு தினம் இருவேளை கொடுக்க நற்பயனை தரும்.

~சூர்யநிலா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula