free website hit counter

மூலிகை அறிவோம் - பொன்மேனி தரும் பொன்னாங்காணி

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படுவதும் மேனி அழகிற்காக உணவுகளில் சேர்க்கபடுவதுமான முக்கிய கீரை வகையாகும். பொன் தரும் பொன்னாங்காணியைப் பற்றி மருத்துவ உரையில் பார்க்கலாம்.
தாவரவியல் பெயர்- Alternanthera sessiles
குடும்ப பெயர்- Amaranthaceae
ஆங்கிலப் பெயர்- Sissoo spinach
சிங்கள பெயர்- Mukunuwenna
சமஸ்கிருத பெயர்- Meenakshi
வேறு பெயர்கள்- கொடுப்பை, சீதை

பயன்படும் பகுதி- இலைகள்

சுவை- இனிப்பு
வீரியம்- சீதம்
விபாகம்- இனிப்பு

வேதியியல் சத்துக்கள்-
Protein
Iron
Gold
Alpha-Beta -tocopherol
Hydrocyanic acid
Stigmaterol

மருத்துவ செய்கைகள்-
Alterative- உடற் தேற்றி
Cholagogue - பித்த நீர் பெருக்கி
Cooling- குளிர்ச்சியுண்டாக்கி
Diuretic - சிறுநீர் பெருக்கி
Galactagogue - பாற் பெருக்கி
Laxative - மலமிளக்கி

தீரும் நோய்கள்-
விழி நோய்
கருவிழி ரோகங்கள்
வாத தோஷம்
தேகச்சூடு
மூலரோகம்
ஈரல் நோய்கள்
பாம்பு கடி விடம்
கொனோரியா

பயன்படுத்தும் முறைகள்-
தினம் இதனை துவட்டி சாப்பிட தேகம் ஒளிபெறும். பூண்டு சிறிது அதிகமாய் சேர்த்து சாப்பிட மூலம் தீரும்.
இதன் சாறு பசு நெய்யுடன் சேர்த்து பாம்புக்கடி விஷத்துக்கு கொடுக்கப்படும்.
உப்பு இல்லாமல் வேக வைத்து வெண்ணெயிட்டு 40 நாள் உண்ண கண் வியாதிகள் தீரும்.
இதை அரைத்து வில்லை செய்து, ஒரு நீர் நிறைந்த பானை மீது அப்பி, மறுநாள் காலையில் இதை எடுத்து கண்களின் மீது வைத்துக் கட்ட பித்த சம்பந்தமான கண் நோய்கள் தீரும்.
நெய்விட்டு வதக்கி கண்களுக்கு கட்ட வாத அல்லது கப சம்பந்தமான வியாதிகள் தீரும்.
இதன் தைலத்தால் தலைமுழுகி வர கண் நோய்கள் தீரும்.

இதன் சாறு 1L, கரிசாலை சாறு 1L, தேசிப்பழச் சாறு 500 mL, பசுவின்பால் 1L, பசு நெய் 1L ஒன்றாக கலந்து அதில் 70g அதிமதுரத்தை பால்விட்டரைத்து கலந்து, காய்ச்சி மெழுகு பதத்தில் வடிகட்டி கீழ் குறிப்பிட்ட சரக்குகளை சேர்க்கவும்.
சாதிக்காய் - 5 g
சாதிபத்திரி - 5 g
சீனகற்கண்டு - 5 g
கோரோசனை - 5 g
இவற்றை ஒன்றாக கலந்து அதில் 5-10 g வீதம் தினம் இருவேளை கொடுத்து வர மூலச்சூடு, வெப்பரோகம், கைகால் எரிவு, வரண்ட சருமம், வாய்நாற்றம், வெள்ளை, வயிற்று எரிச்சல் இவை தீரும். கண் குளிர்ச்சியும் தீபனமும் உண்டாகும்.

இதன் சாறு 2L, கரிசாலை சாறு 1L, நெல்லிக்காய் சாறு 1L, எண்ணெய் 2L, பசுவின்பால் 2L அதில் அதிமதுரம் 70 g எடுத்து பால்விட்டரைத்து கலந்து காய்ச்சி மெழுகு பதத்தில் வடிகட்டி தலை முழுகி வர 96 வகை கண் வியாதிகளும் பித்த வியாதிகளும் தீரும்.

~சூர்யநிலா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula