free website hit counter

மூலிகை அறிவோம் - மாவின் மாமருத்துவம்

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
முக்கனிகளின் முதல் வேந்தன், ஆரோக்கியத்திற்கு துணைவன், கொல்லும் நோய்களுக்கு பகைவனாகிய மாவின் ஆரோக்கிய குறிப்புகளை இன்று பார்க்கலாம்.
தாவரவியல் பெயர்-Mangifera indica
குடும்ப பெயர்- Anacardiaceae
ஆங்கிலப் பெயர்- Mango tree
சிங்கள பெயர்- Amba
சமஸ்கிருத பெயர்- Amra,Vriksha
வேறு பெயர்கள்-
ஆமிரம், ஆம்பீரம், எகின், சிஞ்சம், கொக்கு, சூதம், சேகரம், சேதாரம், மாழை, மாந்தி

பயன்படும் பகுதி-
இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, மரப்பட்டை, வேர்ப்பட்டை, பிசின்

காய்
சுவை- புளிப்பு, துவர்ப்பு
வீரியம்- வெப்பம்
விபாகம்- கார்ப்பு

பழம்
சுவை- இனிப்பு
வீரியம் -வெப்பம்
பிரிவு -இனிப்பு

பருப்பு
சுவை- துவர்ப்பு
வீரியம்- சீதம்
பிரிவு - கார்ப்பு

வேதியியல் சத்துக்கள்-
Euxanthin acid
Euxanthon
Hippuric acid
Benzoic acid
Mangiferin
Manguferene
Mangiferic acid
Mangin
Maniferol
Citric acid
Tartaric acid
Malic acid
Tannin
Resin
Gum
Vitamin A, B, C
Ascorbic acid
Carotene

மருத்துவ செய்கைகள்- பிஞ்சு
Astringent-துவர்ப்பி
Demulcent-உள்ளழலாற்றி
Stimulant-வெப்பம் உண்டாக்கி
Stomachic-பசித்தீ தூண்டி

காய்
Astringent-துவர்ப்பி
Laxative-மலமிளக்கி

பழம்
Diaphoretic-வியர்வை பெருக்கி
Diuretic-சிறுநீர் பெருக்கி Laxative-மலமிளக்கி
Tonic-உரமாக்கி

கொட்டைப் பருப்பு
Anthelmintic-புழுக்கொல்லி
Astringent-துவர்ப்பி
Demulcent-உள்ளழலாற்றி
Tonic-உடல் உரமாக்கி

மரப்பட்டை, வேர்ப்பட்டை Astringent-துவர்ப்பி
Tonic-உரமாக்கி

தீரும் நோய்கள்-
முத்தோச பிரகோபம்
பசியின்மை
வாந்தி
அக்னி மந்தம்
சீதபேதி
இரத்த அதிசாரம்
உதிரக் கடுப்பு
மூலச்சூடு
பெரும்பாடு
மலக்கிருமி வயிற்றுக்கடுப்பு பெரும்பாடு
வாத பிரமேக வெள்ளை

பயன்படுத்தும் முறைகள்-
இலைக் கொழுந்தை உலர்த்திப் பொடித்து மூன்று விரல் அளவு எடுத்து மதுமேகத்துக்கு(Diabetes) கொடுக்கலாம்.

இலையை பிழிந்து எடுத்த சாறு 2 பங்கு , தேன், பால் 1பங்கு, பசும் நெய் கால் பங்கு ஒன்றாய் கலந்து இரத்த மூலத்திற்கு கொடுக்கலாம்.

இலையை தேன் விட்டு வதக்கி கசாயமிட்டு தொண்டைக்கட்டு, குரல் கம்மல் முதலியவற்றுக்கு கொடுக்க குணமாகும்.

இலையை தீயிலிட அதில் இருந்து வரும் புகை தொண்டைக்கம்மலை நீக்குவதோடு விக்கலையும் நிறுத்தும்.

இலையைச் சுட்டு சாம்பலாக்கி வெண்ணெயில் குழைத்து தீப்புண், வேக்காடு முதலியவைகளுக்கு போட சுகமாகும்.

பூவை உலர்த்தி கசாயமிட்டு அதிசார பேதி, நாட்பட்ட சீதபேதி முதலியவைகளுக்கு கொடுத்துவர சுகமாகும்.

பூவை உலர்த்திய பொடியைத் தூபமிட கொசுவின் தொல்லை குறையும்.

விதை முற்றாத பிஞ்சை எடுத்து காம்பு நீக்கி வாடவைத்து ஊசியாற் பல குத்துகளிட்டு, உப்பு நீரில் ஊறப்போட்டு வெயிலில் வைத்து உலர்த்தி உபயோகிக்க தீபனம் உண்டாகும்; பசியின்மை நீங்கும்.

தோலை சீவி எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி நெய்யில் பொரித்து சர்க்கரை கலந்து அரைத்து மாத்திரைகளாக செய்து, சூதக கட்டுக்கு கொடுக்க சுகமாகும்.

100 கிராம் தோலை எடுத்து தயிர்விட்டு அரைத்து கூழாக்கி பேதிக்கு கொடுக்க தீரும்.

இதில் பலவித துவையல், ஊறுகாய்கள் செய்து சாப்பிடலாம்.

பச்சை காயைக் தக்கபடி உப்பிட்டு கலந்து வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மிளகாய் சேர்த்து தாளித்து பயன்படுத்தலாம்.

பழத்தை தோல் சீவி எடுத்துவிட்டு கொட்டை நீக்கி சர்க்கரை சேர்த்து காய்ச்சி, வாந்திபேதி (கொள்ளை நோய்) முதலிய நோய்களுக்கு கொடுக்கலாம்.

பழச்சாறு தொண்டை சம்பந்தமான வியாதிகளைப் போக்கும்.
வெளிப் பிரயோகம் ரத்தப்போக்கை நீக்கும்.

இரத்த மூலம், சீதபேதி ஆகியவற்றுக்கு மாங்கொட்டை பருப்பு ஒரு சஞ்சீவி ஆகும்.

பருப்பை எடுத்து பொன்னிறமாக வறுத்து தூள் செய்து 500-1000 mg வரை கொடுக்க வயிற்றுக் கடுப்பு, சீதபேதி, ரத்த பேதி ஆகியவை போகும்.

மாங்கொட்டைப் பருப்பு, கசகசா, சுக்கு, ஓமம் சம அளவு எடுத்து தேசிப்பழ சாற்றில் அரைத்து நெய்யில் குழப்பி இரண்டு விரல் அளவு கிள்ளி கொடுக்க அதிசாரபேதி தீரும்.

மாம்பட்டை, கோரைக்கிழங்கு இவைகளை சரி எடை எடுத்து இடித்து பிட்டவியலாக அவித்துப் பிழிந்து அதில் அதிவிடயம், இலவம் பிசினை சரி எடை எடுத்துத் தூள் செய்து சேர்த்து கலந்து குடிக்க, அதிசாரமும் அதை சார்ந்த சுரமும் நீங்கும்.

மாவிலை அல்லது பட்டையிலிருந்து வரும் பாலை கால் வெடிப்புக்கு உபயோகிக்கலாம்.

மாம்பிசினையும் கால் வெடிப்புக்கு உபயோகிக்கலாம்.

~சூர்யநிலா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula